Sunday, June 3, 2012

கனவும் காலமும்



னவின் வண்ணம் காய்வதற்குள்
அடுத்த
கனவுக்குள் புகுந்துவிட வேண்டும்.
நற்கனவோ அல்லவோ
நனவை அதுவே நடத்திச் செல்கிறது.
ஒப்பிட்டு அலசி ஆய்ந்து நடப்பது
ஒருபோதும் உவப்பாயில்லை.
பயத்திலோ ஆசையிலோ படகு
வளைந்தோ நெளிந்தோ
வழுக்கிச் செல்கிறது.
சிலசமயம் திரும்பியும்.  


7 comments:

அப்பாதுரை said...

அருமை.
ஒரு கனவுக்கும் இன்னொரு கனவுக்கும் இடையிலான ஆசுவாசம் வாழ்க்கை என்ற டூமசின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

Unknown said...

கனவின் வண்ணம் காய்வதற்குள்
அடுத்த
கனவுக்குள் புகுந்துவிட வேண்டும்//

கனவுகள் தான் பல புதிய கண்டுபிடிப்புகளுக்குக்
காரணமாகிறது.
கவிதை நன்று

த ம ஓ 1

சா இராமாநுசம்

ரிஷபன் said...

நனவை அதுவே நடத்திச் செல்கிறது!

அருமை.

தி.தமிழ் இளங்கோ said...

கனவுக்கு இல்லை எல்லை என்பதனை அலசும் கவிதை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நனவை கனவே நடத்திச் செல்கிறது.//

பெரும்பாலான நேரங்களில் அப்படித்தான் ;)

Rekha raghavan said...

//கனவின் வண்ணம் காய்வதற்குள்//

இந்த வரிகள் அபாரம்.

ஹ ர ணி said...

கனவு காண்பதில் இப்படியொரு உத்தியா...அருமை ஜனா உங்கள் கனவும் அது நனவை இயக்குவதும்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!