வானம் வசப்படுமோ இல்லையோ
கவிதை வசப்படாது,
விட்டுவிட்டேன்.
கூட்டம் வசப்படுமோ இல்லையோ
நட்பு வசப்படாது,
விட்டுவிட்டேன்.
ஞானம் வசப்படுமோ இல்லையோ
சாந்தம் வசப்படாது,
விட்டுவிட்டேன்.
இன்னும்...
வசப்படாத சங்கீதம்,
வசப்படாத காதல்,
வசப்படாத சமையல் என்று
வைத்திருக்கிறேன் நிறைய
ஒவ்வொன்றாய் விட்டுவிடுவதற்கு.
11 comments:
வசப்படாது என விட்டுவிட நம் எல்லோரிடமும் உண்டு.....
எனக்கு கவிதை வராது.... விட்டு விட்டேன்... :)))
நல்ல கவிதை....
வாராததை விட்டுவிடுவது தான் புத்திசாலித்தனம் என்பதை சொல்லிச் செல்கிற கவிதை அருமை.
நல்ல கவிதை
//வானம் வசப்படுமோ இல்லையோ
கவிதை வசப்படாது, விட்டுவிட்டேன்.//
வசப்படாது என நினைத்து நீங்கள் விட்டுவிட்டாலும்
கவிதை உங்களை விட்டுவிட மறுக்கிறது.
நல்ல கவிதை! பாராட்டுக்கள்.
நெருங்க நெருங்க விலகுவதும்
விலக விலக நெருங்குவதும்
கவிதையின் பிறவிக் குணம் போலும்
நீங்க விலக முயல
வசப்பட்ட்டிருக்கிறது பாருங்களேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர்ந்துவிலகிச் செல்லவும்
இதுபோன்ற நல்ல படைப்புகள் தரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நல்ல கவிதை!
வானம் வசப்படும் என்று சொல்லும் கவிதையும் உண்டு,அது நாணயத்தின் ஒரு பக்கம், உங்கள் 'வாரா வசந்தங்கள்' நாணயத்தின் மறுபக்கம்!
விட்டு விடுவது ஒரு செளகரியம்:)! தப்பித்தல்.
கவிதை மிக அருமை!!!!
வசமான கவிதை அழகு.
ஜனா,,
ஒரு பெரிய ஞானத்தை இவ்வளவு எளிதாக சொல்கிறீர்கள். விட்டுவிடுதல் என்பது அவவளவு எளிதல்ல. அவ்வளவு பக்குவம். இயலாமையில் விடுவது என்பது மறுபடியும் முயற்சிக்க வைக்கும். நிறைய வைததிருக்கிறேன் விட்டுவிடுவதற்கு என்பது தன்னிலை உணர்தலின் பின் வெளிப்படுவது. விடுதல் என்பது அற்புதமான ஒன்று. எல்லோருக்கும் வாய்க்காது. ஆனாலும் இப்படியொரு மனோபாவத்திற்கு தயாராகிவிட்டீர்கள் போலும். அருமை.
ஒவ்வொன்றிலிருந்தும் விட்டு விடுதலையாகி அந்தச் சிட்டுக்குருவியைப் போல் சிறகடித்துப் பறக்க ஆசை கொண்டாயிற்றா...
யாருக்கோ அல்லது எதற்கோ வசப்பட்டு விட்டால் இந்த எசப் பாட்டு வரத்தான் செய்யும்! இல்லையா?
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!