Monday, July 2, 2012

நீங்க நல்லவரா கெட்டவரா?


அன்புடன் ஒரு நிமிடம் - 10

நீங்க நல்லவரா கெட்டவரா?

லோ மாமா!உள்ளே நுழையும்போதே கிஷோர் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.
என்னடா ட்ரான்ஸ்ஃபர்லே கோவை போய் மூணு மாசமாச்சே, எங்களையெல்லாம் ஞாபகம் வெச்சுருக்கியா?
அதெப்படி மறப்பேன்? முதல் முதலா லீவு போட்டு ஊருக்கு வந்ததும் உங்களைத்தான் பார்க்க ஓடோடி .வர்றேனாக்கும்.
புது இடம் எப்படி...பிடிச்சிருக்கா?
ரொம்பவே!கொஞ்ச நேர பேச்சுக்குப் பின் கேட்டார். என் நண்பர் தம்பி கதிரேசன்னு ஒருத்தர் அங்கே இருக்கார், முடிஞ்சா மீட் பண்ணுன்னு சொல்லியிருந்தேனே, பார்த்தியா அவரை?
பார்த்தேன், பார்த்தேன். அட்ரசை விசாரிச்சப்ப நான் தங்கியிருந்த இடத்துக்குப் பக்கத்திலதான் அவர் வீடு. போய் சந்திச்சப்போ நல்ல வரவேற்பு கொடுத்தார். ரொம்ப அனுசரணை. அடிக்கடி சந்திப்பேன் அவரை. ரொம்ப நல்ல மனுஷன். துளி கூட பந்தா இல்லை. அரை அங்குலம் கூட முகச் சுளிப்பு இல்லாம உதவி செய்யறவர். பேச்சு எப்பவும் இனிமையா இருக்கும். மொத்தத்தில் ஒரு ஜென்டில்மேன்.
அடடே? அப்படியா? அப்ப அவரைப் பத்தி உன் அபிப்பிராயம்?
வேறென்ன? ஒரு நல்ல மனுஷன்கிறது தான்.
அப்படீன்னா நான் கவலைப் பட வேண்டியதுதான்!
ஏன் மாமா அப்படி சொல்றீங்க?
ஒரு நிமிஷம், என்றவர் யாருக்கோ போன் செய்தார். ஸ்பீக்கர் போனில் பேசினார். ஹலோ மகாதேவன், எப்படி இருக்கே? சில நிமிடங்கள் பேசினார். பை த பை அங்கே நம்ம கதிரேசன் எப்படி இருக்கிறார்? உங்க பிரண்ட்ஷிப் நல்ல போயிட்டிருக்கா?
அதை ஏன் கேட்கறீங்க? அவரோட எல்லாம் பழகறது ரொம்ப கஷ்டம். நம்மால முடியாது...
என்னப்பா அப்படி சொல்றே?
ஆமா சார், ரொம்ப உரிமை எடுத்துக்குவாரு. நம்ம பர்சனல் விஷயத்திலெல்லாம் தலையிடுவார். சின்ன காரியத்திலெல்லாம் கோபப்படுவாரு. மொத்தத்தில் நாட் எ ஜெண்டில்மேன்.
பேசி முடித்துவிட்டு இவன் பக்கம் திரும்பினார். இப்ப என்ன சொல்றே? அதே ஆளைப் பத்தித்தான் கேட்டேன். இவன் இப்படி சொல்றானே?
கிஷோர் குழம்பினான். என்ன காரணம்? புரியலே எனக்கு.. ஒரு வேளை இவன் அவசரத்தில் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் அவரை, இல்லையா?.
ஆனா நீ சொன்னது ஒரு மாச பழக்கத்தில் உருவான அபிப்பிராயம். அவன் இவரோட பழகி ஆறு மாசம் ஆச்சு. அவரோட இன்னொரு பக்கத்தையும் பார்க்கிற அவகாசம் அவனுக்குக் கிடைச்சிருக்கலாம். அதனால அபிப்பிராயம் இப்படி வருது. முதல் பழக்கத்தில் பெரும்பாலோர் நல்லவங்களாத்தான் காட்சியளிப்பாங்க. அதை வெச்சு ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது இல்லையா?
அப்ப மகாதேவன் இப்ப சொன்னதுதான் அவரைப்பற்றிய சரியான அபிப்பிராயமா?
அவரு நல்லவரா கெட்டவரான்னுதானே யோசிக்கிறே?
அது வந்து... ஆமா அதான்.
‘“யாருமே முழுக்க நல்லவருமில்லை கெட்டவருமில்லை. பலவித குணங்களும் கலந்தவங்கதாம் எல்லாரும். அதனால அவங்களை அப்படியெல்லாம் வகை பிரிக்கமுடியாது. அவங்களை அவங்களா பார்க்கிறது, ஏத்துக்கறதுதான் நாம் செய்யக்கூடியது. செய்ய வேண்டியதும் கூட.


('அமுதம்' இதழ் ஜூன் 2012 )

<<<>>>

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“யாருமே முழுக்க நல்லவருமில்லை கெட்டவருமில்லை. பலவித குணங்களும் கலந்தவங்கதாம் எல்லாரும். அதனால அவங்களை அப்படியெல்லாம் வகை பிரிக்கமுடியாது.//

ஆஹா! அருமை மட்டுமல்ல இதுதான் உண்மையும் கூட. உலக எதார்த்தமே இது தான்.

//அவங்களை அவங்களா பார்க்கிறது, ஏத்துக்கறதுதான் நாம் செய்யக்கூடியது.
செய்ய வேண்டியதும் கூட.”//

கரெக்ட். ;)

நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

Avargal Unmaigal said...

//யாருமே முழுக்க நல்லவருமில்லை கெட்டவருமில்லை. பலவித குணங்களும் கலந்தவங்கதாம்//

மிகஸ் சரியாக சொன்னீர்கள். ஒவ்வொருவனும் நல்லவனா கெட்டவனா என்பதை சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும்தான் திர்மானிக்கின்றன என்பது எனது கருத்து

Ramani said...

‘“யாருமே முழுக்க நல்லவருமில்லை கெட்டவருமில்லை. பலவித குணங்களும் கலந்தவங்கதாம் எல்லாரும். அதனால அவங்களை அப்படியெல்லாம் வகை பிரிக்கமுடியாது. அவங்களை அவங்களா பார்க்கிறது, ஏத்துக்கறதுதான் நாம் செய்யக்கூடியது. செய்ய வேண்டியதும் கூட.”

அனைவரும் மனதில் கொள்ளவேண்டிய
அருமையான கருத்து
சொல்லிச் சென்றவிதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 1

ரிஷபன் said...

அவங்க பழக்கம் நம்மகிட்ட என்ன பாதிப்பினை தரும் என்பதுதான் ரொம்ப முக்கியம்..

கோமதி அரசு said...

‘“யாருமே முழுக்க நல்லவருமில்லை கெட்டவருமில்லை. பலவித குணங்களும் கலந்தவங்கதாம் எல்லாரும். அதனால அவங்களை அப்படியெல்லாம் வகை பிரிக்கமுடியாது. அவங்களை அவங்களா பார்க்கிறது, ஏத்துக்கறதுதான் நாம் செய்யக்கூடியது. செய்ய வேண்டியதும் கூட.”//

உண்மையான வார்த்தை.
மனிதர்களை அப்படியே அவர் அவர் குணநலத்துடன் ஏற்றுக் கொள்வது தான் நல்லது.

வெங்கட் நாகராஜ் said...

//“யாருமே முழுக்க நல்லவருமில்லை கெட்டவருமில்லை. பலவித குணங்களும் கலந்தவங்கதாம் எல்லாரும். அதனால அவங்களை அப்படியெல்லாம் வகை பிரிக்கமுடியாது. அவங்களை அவங்களா பார்க்கிறது, ஏத்துக்கறதுதான் நாம் செய்யக்கூடியது. செய்ய வேண்டியதும் கூட.”
//

சரியான பார்வை...

த.ம. 3

Lali said...

Factu!Factu! Factuuu! :)
Mind blowing story.. Keep going

Lali
http://karadipommai.blogspot.in/

Mahi said...

யதார்த்தத்தை சொல்லும் கதை! நல்லா இருக்குங்க!

ராமலக்ஷ்மி said...

நிறைகுறைகளோடு மனிதரை ஏற்றுக் கொள்வதே அன்பின் சிறப்பு.

அன்புடனான நிமிடங்கள் தொடரட்டும்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!