Thursday, February 18, 2010

யுக்தி


ருகில் வந்த மனைவி யமுனா கேட்டாள்.

''நீங்க போகிறது உங்க பிரமோஷன் இண்டர்வியூவுக்கு. ஒரு நாள் தான் அங்கே இருக்க முடியும். அங்கே இருக்கிற உங்க சித்தப்பா மகன் முருகேஷை அவன் வேலை பார்க்கிற கம்பெனியில் போய்ப் பார்க்கணும். நேரத்துக்கு ரயிலைப் பிடிச்சுத் திரும்பணும். இத்தனை வேலைக்கிடையில் வருணையும் கூட்டிட்டுப் போய் என்ன பண்ணப் போறீங்க? அவன் படிப்பு வேற பாழாகும்.''

''எல்லாம் காரணமாத்தான் அழைச்சிட்டுப் போறேன். வந்ததும் பாரு,'' என்றார் சுப்புராம்.

ன்டர்வியூ முடிந்ததும் டைடல் பார்க் சென்றார்கள். அகன்ற லிஃப்டில் உயர்ந்து அந்த கம்ப்யூட்டர் கம்பெனியில் பிரவேசித்தார்கள்.

ஏ.சி. நாசியை வருடிற்று. அசத்தலான க்யூபிகள்களில் பிரபுக்கள் போல அமர்ந்து வண்ணத் திரைகளுடன் உறவாடி அமரிக்கையாக பிராஜெக்டுகளைப் படைத்துக் கொண்டிருந்த இளைஞர்களை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டே வந்தான் வருண். ஒவ்வொரு விஷயமாக முருகேஷிடம் கேட்க அவன் விளக்க, இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை இவனுக்கு.

த்து நாட்களுக்குப் பின்...

'என்னங்க, வருண் ஆளே மாறிவிட்டான். இப்பல்லாம் முன்னைவிட நல்லா படிக்கிறான். நல்ல மார்க் வாங்கி முருகேஷ் வேலை பார்க்கிறது மாதிரி ஒரு பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியில் சேரப் போகிறானாம். யோசனையோடுதான் செயல் பட்டிருக்கீங்க!''

கணவரைப் பாராட்டினாள் யமுனா.

(01-08-2007 குமுதம் இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

11 comments:

ரிஷபன் said...

சொல்வதை விட காட்டித் தருவது மேல்.. நல்ல யுக்தி..

R.Gopi said...

மீன் எப்போதும் பிடித்து தருவதை விட, மீன் பிடிக்கும் உத்தியை சொல்லி கொடுப்பது சால சிறந்தது...

அதை அழகாக வருணின் தந்தை அவருக்கு எடுத்துக்காட்டி விட்டார்...

நல்ல கதை... பிரசுரமானதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை...

பழமைபேசி said...

நல்லா இருக்குங்க!

சைவகொத்துப்பரோட்டா said...

நேரடி அனுபவம் ஒரு சிறந்த வாழக்கை பாடம்னு சொல்லி இருக்கீங்க, உண்மைதான்.

SRK said...

இங்கே அமெரிக்காவில் பெரும்பாலான அலுவலகங்களில் Bring Your Child to Work Day என்று வருடத்தில் ஒரு நாள் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் குழந்தைகள் அலுவலகங்களில் என்ன நடக்கிறது என்று கண்டறிகிறார்கள்.

தெய்வா said...

உங்கள் எண்ணம் உலக நடப்பை தெளிவாக காட்டுகிறது.

நீங்கள் நாகர்கோவிலில் தானே இருக்கிறீர்கள்??

நான் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன்.

தெய்வா

கே. பி. ஜனா... said...

நன்றி தெய்வா! உங்களைப் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்... கே.பி.ஜனா

Rekha raghavan said...

ஒரு பக்கக் கதையிலேயே ஒரு அருமையான மெசேஜ் சொல்லியிருக்கும் உங்க யுக்திக்கு ஒரு கிரேட் ஸல்யூட்.

ரேகா ராகவன்.

கே. பி. ஜனா... said...

நன்றி ரிஷபன்!
நன்றி பழமைபேசி!
நன்றி சத்யராஜ்குமார்!
நன்றி 'சைவ கொத்துப்பரோட்டா'!
நன்றி கோபி!
நன்றி ராகவன்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பையனைக் கூட்டிக் கொண்டு போனதன் CLIMAX கடைசியில் தெரிய வரும்போது...
REALLY WONDERFUL!!

தமிழ் said...

அருமை

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!