Monday, March 1, 2010

ஒன்றேனும்...



புரியாதபடி எழுதுவது எனக்கு

போதாததாகவே இருக்கிறது.

எப்படிப் புரிந்து கொண்டாயோ...

சில சமயம் புரிந்ததோ என்று கூட

எழும் தவிப்பு அபாரமானது.

என்னுள் உறுத்தி என்னைக் கொல்வது.

விரும்பத்தக்க விளைவு அல்லவே அது?

புரிந்தும் புரியாமல் எழுதுவது கூட

பரஸ்பரம் நம்பிக்கையை சிதைப்பதாகவே.

உன் அதீத மதிப்பீடும் மன

இறுக்கத்திலேயே தள்ளும் பின்னாளில்.

ஆயினும் என்ன, என்னை

அப்படியே உன்னிடம் கொண்டு சேர்க்கும்

ஒரு கவிதை கூட

இன்னமும் நான் எழுதவில்லை.

10 comments:

ரிஷபன் said...

என்னை

அப்படியே உன்னிடம் கொண்டு சேர்க்கும்

ஒரு கவிதை கூட

இன்னமும் நான் எழுதவில்லை.

யார் சொன்னது? இதோ எழுதி விட்டீர்களே..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Nallaa irukku. kalakkal.

கிருபாநந்தினி said...

புரிந்தும் புரியாமல் இருக்கிறது உங்கள் கவிதை! :)

R.Gopi said...

//என்னை

அப்படியே உன்னிடம் கொண்டு சேர்க்கும்

ஒரு கவிதை //

*******

அதான் எழுதியாச்சே....

கலக்கல் கவிதை.... வாழ்த்துக்கள்......

சைவகொத்துப்பரோட்டா said...

அப்ப சீக்கிரம் எழுதுங்க :))
நல்லா இருக்கு.

CS. Mohan Kumar said...

சார்.. விண்ணை தாண்டி வருவாயா பாதிப்பா? யூத்து மாதிரி எழுதுறீங்களே!! :))

creativemani said...

ஆரம்பமும் முடிவும் அமர்க்களம்..... :)

பத்மா said...

அருமை

பத்மா said...

உங்கள் அனைத்து படைப்புகளையும் படித்தேன் .ஜனரஞ்சகம்

கே. பி. ஜனா... said...

ரிஷபன், ஆமா சார், எப்படியோ 'என்னை அப்படியே உங்களிடம் கொண்டு சேர்க்கும் கவிதை இன்னமும் எழுதவில்லை நான்' என்பதை சரியாக உங்களிடம் கொண்டு சேர்த்து விட்டேன்! ஹி ஹி...

ஜெஸ்வந்தி, நன்றி.

கிருபா நந்தினி, அப்பாடா, கரெக்டா சொல்லிட்டீங்க.

கோபி, ஆமா சார்...(மேலே சொன்னது)

சைவ கொ.ப., எழுதறேன் சார், எழுத முடிந்ததும்!

மோகன் குமார், வி.தா.வ. இன்னும் பார்க்கலை. மாதிரி என்ன சார் மாதிரி? ரியல் யூத்து சார் என் எழுத்து!(அதாவது எனக்கு!)

மணிகண்டன், குமுதத்தில் அந்தக் காலத்தில் வரும் சினிமா விமரிசனங்களின் கடைசி வரி அட்டகாசமா இருக்கும். ஒரு முறை கள்வனின் காதலி என்ற படத்துக்கு வந்த விமரிசனத்தின் கடைசி வரிகள்: 'படத்தில் முதல் காட்சியும் கடைசிக் காட்சியும் பிரமாதமாக இருக்கின்றன.
அவை மட்டும்!'

பத்மா, //உங்கள் அனைத்து படைப்புகளையும் படித்தேன்// ரொம்ப பொறுமை தேவைப்பட்டிருக்குமே? நன்றி!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!