அடிக்கடி தூக்கம் வராமல் அவதிப்படுகிற எனக்கு அறிவுரை, வழியுரை பொழிப்புரை எல்லாம் சொன்ன என் மாமா இந்த உதாரணத்தை சொன்னார். ''மாமன்னன் நெப்போலியன் எப்போது நினைத்தாலும் அழகாகத் தூங்கி விடுவானாம். போர்க்களத்துக்கு குதிரையில் போய்க் கொண்டிருக்கும்போது கூட அந்தக் குதிரையின் மேலமர்ந்தபடியே அரைமணி, கால் மணி தூங்கி விடுவான். எப்படி இது தங்களுக்கு சித்தியாகிறது என்று கேட்ட தன் அமைச்சருக்கு அவன் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா? புறாக்கூண்டு மாதிரி என் மனதில் நிறைய கூடுகளைக் கற்பனை செய்து கொள்கிறேன். என்னுள் உள்ள பிரசினைகளை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து விட்டு சரி, இதை நாளைக்குக் கவனிக்கலாம் என்று சொல்லியபடி அவற்றை ஒவ்வொரு கூண்டிலாக அடைத்து விடுவேன். அப்புறம் நிம்மதியாக தூங்கி விடுவேன்!''
இதை கேட்டதுமே நான் உற்சாகமாகி விட்டேன். இன் ஃபாக்ட் அப்போதே தூக்கம் வந்துட்ட மாதிரி சொக்கிப் போனேன் அந்த ஐடியாவில்.
அன்றிரவே அதை அமுல், செரிலாக் எல்லாம் படுத்தினேன். வாடி, வாடி என்று ஒவ்வொரு பிரசினையாக எடுத்து அலசி அதை கூண்டில் அடைத்துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று விழித்த என் மனைவி, இன்னும் தூங்கலையா என்று கேட்டபோது நான் அமைதியாகச் சொன்னேன், ''கொஞ்சம் இரு, இன்னும் நாலஞ்சு கூண்டு தான் பாக்கி, அப்புறம் ஜம்முனு தூங்கிருவேன்!''
''அதெல்லாம் நாளைக்கு கூட்டில் அடைக்கலாம் உங்க புறாக்களை! மணி ஆறரை ஆச்சு, எழுந்து வேலைக்குப் போகிற வழியைப் பாருங்க!'' என்றாள்.
சே! நெப்போலியன் காலம் மாதிரியா இப்ப? ஒரு மனுஷனுக்கு எவ்வளவு பிரசினை இருக்கு! அதை யாராச்சும் யோசிக்கிறாங்களா?
9 comments:
நல்லா அடைச்சீங்க புறாக்களை கூண்டுல...
ஏகப்பட்ட புறாக்கள் இருக்கு போல :))
உங்க தூக்கம் வராத ”புறாப்ளம்” என்ன ஆச்சு அப்புறம்?
அட்டகாசம்!!! புறாகூண்டா கேக்குது ?
(நெப்)போலி(யன்) ஐடியாவா இருக்கும் போலிருக்கே!
arumai!
ரசித்தேன்.
புறாக்கூண்டு டெக்னிக் சூப்பர்!!இதை MCA ல் discrete mathematics என்கிற subject ல் pigeon hole principle என்று வருகிறது!!
:)
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!