Wednesday, March 10, 2010

நினைப்பதெல்லாம் மறந்துவிட்டால்...


''அருமையான பிளாட் சார்! ஆல் அஃ ப் எ ஸடன் வந்தது. மிஸ் பண்ணிட்டேன், சே!'' அலுத்துக் கொண்டார் நண்பர் மாதவன்.

ஒரு நிமிஷம், அவர் சொன்னது நீங்க நினைக்கிற அந்த பிளாட் இல்லே, கதை எழுத ஒரு பிளாட்.

''கடையில சாமான்கள் வாங்கிட்டிருந்தப்ப அந்த நாட் தோணிச்சு. மனசில அசை போட்டு ஜோரா ஒரு பிளாட் உருவாச்சு. அப்புறம் மத்த வேலைகளுக்கிடையில் எப்படியோ மறந்து போச்சு. இப்ப உட்கார்ந்து நாலு மணி நேரமா நல்லா யோசிச்சுப் பார்த்துட்டேன், ஊஹூம், ஞாபகம் வரவே மாட்டேங்குது. சே, போனது போனது தானா?''

என் யோசனையை அவரிடம் சொன்னேன். ''இன்னிக்கு ராத்திரி தூங்கறதுக்கு முன்னே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அதை யோசிச்சு பாருங்க.''

''அப்புறம்?''

''பேசாம படுத்து தூங்கிருங்க. அவ்வளவு தான். காலையில எழுந்திருக்கும்போது தொண்ணூறு பர்சன்ட் அது ஞாபகத்துக்கு வந்திருக்கும்.''

''நிஜமாவா?''

''எனக்கும் நிறைய முறை இப்படி வெற்றி கிடைச்சிருக்கு. எந்த விஷயம் மறந்து போய்விட்டாலும் இதை முயற்சித்து பார்க்கலாம்.அது மட்டுமல்ல. சில வேளைகளில் சில பிரசினைகளில் ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவிக்கிறப்ப முடிஞ்ச வரை அதை நல்ல யோசிச்சுப் பார்த்துட்டு படுத்து உறங்கி எழுகையில் அநேகமா நம்ம ஆழ் மனம் ஒரு வழியை அல்லது முடிவு எடுப்பதற்கான ஒரு பாயிண்டை எடுத்துக் கொடுப்பதைப் பார்க்கலாம்,'' என்றேன்.

று நாள் மாதவன்... ''சூப்பர் சார் உங்க ஐடியா!''

''என்ன, கிடைச்சிட்டது தானே?'' பாராட்டுக்குத் தயாரானது காது.

''அதை ஏன் கேட்கறீங்க? கொஞ்சம் அதிகமா தூங்கிட்டேன்! காலையில எந்திரிச்சு நினைச்சுப் பார்த்தா போன மாசம் தியேட்டருக்குப் போய் பாதியில தூங்கிவிட்ட சினிமாவின் முடிவு, போன வருஷம் திருவிழாவில செல் போனைத் தொலைச்ச இடம், ரெண்டு வருஷம் முந்தி தொலைச்ச மச்சினியோட டெலிபோன் நம்பர், அப்படீன்னு மறந்து போன, இப்ப பிரயோஜனம் இல்லாத விஷயங்கள்லாம் வரிசையா பளிச்சுன்னு நினைவுக்கு வருது. எது ஞாபகம் வரணுமோ அதைத் தவிர!''

5 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

ஹி.......ஹி..... :))

Anonymous said...

அடடா நாங்க தூங்கின ந---தா வருவாங்க


நல்ல கதை

R.Gopi said...

ஓஹோ...

இந்த ஐடியா படி, நடந்தா, இப்படி எல்லாம் நடக்குமா??

தெரியவே தெரியாதே... இன்னும் கொஞ்சம் யோசிச்சா, பழைய ஜென்ம ஞாபகம் கூட வரும் போல இருக்கு..

ஹீ...ஹீ..ஹீ...

வெங்கட் நாகராஜ் said...

படித்தேன்... ரசித்தேன்.

நல்ல வேளை, அவருக்கு முன் ஜன்ம ஞாபகமெல்லாம் வரலையே!

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

ரிஷபன் said...

செமை ஜோக்.. நல்ல வேடிக்கை!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!