Tuesday, September 4, 2018

நல்லதா நாலு வார்த்தை...91

'முடிந்துவிட்டதே என்று வருந்தாதீர்,
நடந்ததே என்று மகிழுங்கள்.'
- Dr. Seuss
('Don't cry because it's over,
smile because it happened.')
><><

'இன்னும் வசீகரமாக்குகிறாய் 
வாழ்க்கையை
உன் புன்னகையினால்!"
-Thich Nhat Hanh
('Because of your smile 
you make life more beautiful.')


'இரு பெரும் நாட்களுண்டு
எவரது வாழ்விலும் -
ஒன்று நாம் பிறந்த நாள்
மற்றொன்று ஏன் பிறந்தோம்
என்று கண்டுபிடித்த நாள்.'
- William Barclay
('There are two great days in a person's
life - the day we are born and the day
we discover why.')
><><


'நான் மட்டுமே மாற்ற முடியும் என் வாழ்க்கையை.
வேறு யாராலும் அதை செய்ய முடியாது எனக்காக.'
- Carol Burnett
('Only I can change my life. No one can do it for me.')
><><


'அன்பால் ஈர்க்கப்பட்டு
அறிவால் வழி நடத்தப்படுவதே
ஆகச் சிறந்த வாழ்க்கை.'
- Bertrand Russel
('The good life is one inspired
by love and guided by knowledge.')
><><


'கனிவு எப்போதுமே ஒரு
நல்ல கதையை உருவாக்குவதில்லை,
ஆனால் அது ஒரு
நல்ல வாழ்க்கையை உருவாக்குகிறது.'
- Anne Hathway
('Mellow doesn't always make for a
good story but it makes for a good life.')
><><


'ஆன்மாவை இழந்து உலகை அடையாதே.
வெள்ளியையும் தங்கத்தையும் விட  
விவேகம் மேலானது.'
- Bob Marley
('Don't gain the world and lose your soul,
wisdom is better than silver or gold.')
><><


'ஆன்மாவிலிருந்து  
தினசரி வாழ்க்கையின்
அழுக்கைத் துடைப்பது இசை.'
- Berthold Auerbach
('Music washes away from the soul
the dust of everyday life.')
><><


'தைரியம் இல்லாதவருக்கு
அதை நியாயப்படுத்த ஒரு
தத்துவம் கிடைத்துவிடுகிறது.'
- Albert Camus
('Those who lack the courage will
always find a philosophy to justify it.')
><><


'முதற் காற்று வீசும்போது
போதுமளவு ஓடுவதில்லை பெரும்பாலோர்,
இரண்டாவது ஒன்று உண்டென்று
கண்டுகொள்கிற அளவுக்கு!'
- William James
('Most people never run far enough on
their first wind to find out they've got s second.')
><><

5 comments:

Avargal Unmaigal said...

நல்ல வார்த்தைகள் அனைத்து மிக நன்றாக உள்ளது, பகிர்விற்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமையான சிந்தனைகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கோமதி அரசு said...

//அன்பால் ஈர்க்கப்பட்டு
அறிவால் வழி நடத்தப்படுவதே
ஆகச் சிறந்த வாழ்க்கை.'//

அருமை.

இசையைப் பற்றி சொன்னதும் எனக்கு மிகவும் பிடித்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

மற்றொன்று நாளை கண்டுபிடித்தால் ஞானி...

கே. பி. ஜனா... said...

Avargal Unmaigal, வெங்கட் நாகராஜ், கோமதி அரசு, திண்டுக்கல் தனபாலன்: நன்றி... மகிழ்ச்சி...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!