Wednesday, April 1, 2015

நல்லதா நாலு வார்த்தை - 44


‘எத்தனை அற்புதமான விஷயம்
ஒவ்வொரு நாளும்!
ஒவ்வொரு நாளின் மதிப்பை விட
உயர்வாய்ப் பாராட்டத்தக்கது 
ஒன்றுமில்லை!’
- Goethe
(‘What a wonderful thing each day is! Nothing is
more highly to be prized than the value of each day!’)
<>

‘திரும்ப வரா பொருள் நான்கு:
பேசிய வார்த்தை, வீசிய அம்பு,
விட்ட சந்தர்ப்பம், கடந்த வாழ்க்கை.’
- Proverb
(‘Four things come not back – the spoken
word, the sped arrow, the past life, and
the neglected opportunity.’)
<>

’வாழ்வினூடே கடந்து செல்லாதீர்,
வளர்ந்து செல்வீர்!’
- Eric Butterworth
(‘Don’t go through life, grow through life.’)
<>

’விதைக்கையில் வருகிறது மகிழ்ச்சி,
அறுவடையின்போது அல்ல.’.
- Jacinto Benavente
(’Happiness comes with sowing, not reaping.’)
<>

‘ஒரு சிறந்த ஞாபக சக்தி
துளி மை அளவுக்கு
சிறந்தது இல்லை.’
- Proverb
(’A good memory is not as
good as a little ink.’)
<>

’நேரக்கூடிய எல்லா தடைகளும் 
முதலில் அகற்றப்படவேண்டும் எனில் 
எதுவுமே முயற்சிக்கப் பெறாது.’
- Samuel Johnson
(‘Nothing will be attempted if all possible
obstacles must first be removed.’)
<>

’மூன்று வண்ணங்கள், 
பத்து இலக்கங்கள்,
ஏழு ஸ்வரங்களே இருக்கின்றன. 
என்ன செய்கிறோம் 
அவற்றை வைத்துக்கொண்டு நாம் 
என்பதே முக்கியம்.’
- Jim Rohn
(‘There are only 3 colours, 10 digits and 7 notes;
it’s what we do with them that’s important.’)
><><><

9 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் முத்துக்கள்...

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பொன்மொழிகள் அதுவும் தமிழில் மொழிபெயர்ப்பு அருமை!!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
அருமை
தம +1

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை..... நன்றி.

த.ம. +1

cheena (சீனா) said...

அன்பின் கே.பி.ஜனா !

ஏழுமே நல்லதொரு பொன்மொழிகளாக பொன்னெழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டியவை தான், - அருமையிலும் அருமை.

பாராட்டுகள்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கே.பி.ஜனா !

ஏழுமே நல்லதொரு பொன்மொழிகளாக பொன்னெழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டியவை தான், - அருமையிலும் அருமை.

பாராட்டுகள்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கே.பி.ஜனா !

ஏழுமே நல்லதொரு பொன்மொழிகளாக பொன்னெழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டியவை தான், - அருமையிலும் அருமை.

பாராட்டுகள்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கே.பி.ஜனா !

ஏழுமே நல்லதொரு பொன்மொழிகளாக பொன்னெழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டியவை தான், - அருமையிலும் அருமை.

பாராட்டுகள்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!