Saturday, April 4, 2015

அவள் - 18 (கவிதைகள்)


113
உன்னால் நிரம்பிய
கணங்களால் நிரம்பியது
வாழ்க்கை.
 ><

114
ஓய்வாகத்தான் அமர்ந்திருந்தாய்
ஒயில் எனில் என்னவென்று
அறிந்துகொண்டேன்
><

115
ஏந்திக் கொண்டுவிட்டேன் கைகளில்
நீ உதிர்த்த புன்னகையை
இன்றைய மன விளக்காய்.
><

116
யாரோ பேசுகிறார்கள்
எனக்குக் கேட்பது
உன் குரலே.
><

117
நீ பார்த்துக் கொண்டிருந்ததால்
உயிர் பெற்றது
ஜன்னல்.
><

118
நினைவுகள் உன் அருகிலேயே
நானோ தொலைவில்.
><

119
என் கற்பனையைக்
கற்பகத் தருவாக்குகிறாய்
நிஜத்தில்.
><

120
என் மனதின் ஆழத்திலிருந்து
இயங்குகின்ற இரண்டு-
நீயும் கவிதையும்.

><><><

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னே ரசனை...!

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தையும் ரசித்தேன். 117 மிகவும் பிடித்தது.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை வாழ்த்துக்கள்
த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை.

117 + 118 வெகு அருமை.

மனோ சாமிநாதன் said...

அனைத்தையும் ரசித்தேன்!

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்தும் அருமை! ரசித்தோம். 116, 117, 118 ஆஹா!

ஷைலஜா said...

எல்லாமே பிடிச்சது //யாரோ பேசுகிறார்கள்
எனக்குக் கேட்பது
உன் குரலே./// இது ரொம்ப!

நிலாமகள் said...

உணர்வுகளின் அழகு ஊர்வலம்!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
ரசித்தேன் நண்பரே
தம +1

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!