Tuesday, March 31, 2015

தனக்குத் தானே...

அன்புடன் ஒரு நிமிடம் - 77
“அப்பப்பா, தாங்க முடியலே!” வந்து உட்கார்ந்தார்  நாகராஜன்.
“ஆமா, இன்னிக்கு 41 டிகிரி!” விசிறியபடியே சாத்வீகன்.
“வெயிலைச் சொல்லலே நான்!” என்றார் அவர், “எல்லாம் நம்ம பரமானந்தம் பண்ற கூத்தைத்தான் சொல்றேன்.”
‘அவனா? ஆமா, நேற்றுகூட வந்தானே, ஏதோ ரெண்டு புத்தகம் எழுதப்போறதைப் பத்தி சொல்லிட்டிருந்தான்.”
“உங்க கிட்டேயுமா? சரிதான், அதை சொல்லத்தான் வந்தேன். தம்பட்டம்! தம்பட்டம்! தாங்க முடியலே.!”
“தம்பட்டம்?”
“ஆமா,  நான் ரெண்டு புக் எழுதப் போறேன், அடுத்த ஆறு மாசத்தில ரெண்டு புக், ரெண்டு புக் அப்படீன்னு ஒரே…. வரலாற்றுப் புதினம் ஒன்றாம். இன்னொண்ணு அறிவியல் கட்டுரைத் தொகுப்பாம். ஒவ்வொண்ணும் ஐநூறு பக்கத்துக்குக் குறையாம இருக்குமாம்.”
“சொல்றானாக்கும்?”
“ஆமா, அவர் ஆபீஸ் அட்டெண்டரிலிருந்து அடுத்த தெரு அழகேசன் வரை ஒரு ஆள் விடாமல்!.”
“இனிமேல்… இனிமேல் எழுதப் போறேன்னு?”
“இன்னும் ஆறு மாசத்துக்குள்ளே முடிச்சு பப்ளிஷ் பண்ணிடுவானாம்.”
”ஓஹோ?”
“ஏதோ ஓண்ணு ரெண்டு சிறுகதை, நாலு கவிதை அவர் எழுதி பத்திரிகைகள்ல வந்திட்டது. அதுக்காக இப்படி கையில டமாரத்தை எடுத்திட்டு அலையணுமா? மனசில தான் ஏதோ பெரிய எர்னெஸ்ட் ஹெமிங்வேன்னு நினைப்பு!”
சாத்வீகன் சிரித்தார். “அட, அதான் என்கிட்டேயும் சொன்னானா? புரியுது புரியுது!“
“என்ன சொல்றீங்க, எனக்கு ஒரு மண்ணும் புரியலே!”
“உட்கார். நல்ல கூர்ந்து கவனித்தாயானால் அவன் செய்யறது ஒரு நல்ல டெக்னிக்னு உனக்கும் புரியும். ஓர் ஆள் பாக்கி விடாம இப்படி
அவன் தேடிப்போய் சொல்கிறான்னா எல்லாரிடமும் அவன் ஒரு கமிட்மெண்டை ஏற்படுத்துகிறான்னு அர்த்தம்.  அப்புறம் அதை செய்யாமல் இருக்க முடியாது. ஒவ்வொருத்தரும் கேட்பாங்க இல்லையா, என்னமோ புத்தகம் அது இதுன்னியே என்ன ஆச்சுன்னு? சொந்தக்காரர்களிலிருந்து நண்பர்கள் வரை? வரிசையா அவங்களுக்கு பதில் சொல்லணுமே? அது இதுன்னு சாக்குப் போக்கு சொன்னால் மதிப்பு குறையுமே? எழுத முடியலேன்னோ எழுத வராதுன்னோதானே நினைப்பாங்க? அதை எப்படி சகிக்க முடியும்? அதனால எப்படியும் எழுதியாகணும். அந்த நினைப்பு, அந்த அழுத்தம் எழுத வெச்சிடும். விஷயம் கண்டிப்பா நடந்துடும்…”o

நாகராஜன் வியப்புடன் பார்க்க, தொடர்ந்தார், ”அதான் இப்படி ஒரு சுயப் பொறுப்பை வலியுறுத்தும் சூழ்நிலையை தனக்குத்தானே ஏற்படுத்திக்கிறான். செய்ய நினைக்கிற சில விஷயங்களை செய்து முடிக்க இது ஒரு நல்ல, தோற்றுப்போக சாத்தியமில்லாத வழின்னுதான் நான் சொல்வேன்.”
(”அமுதம்’ மே 2014 இதழில் வெளியானது.)
(படம் - நன்றி : கூகிள்)

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//”அதான் இப்படி ஒரு சுயப் பொறுப்பை வலியுறுத்தும் சூழ்நிலையை தனக்குத்தானே ஏற்படுத்திக்கிறான். செய்ய நினைக்கிற சில விஷயங்களை செய்து முடிக்க இது ஒரு நல்ல, தோற்றுப்போக சாத்தியமில்லாத வழின்னுதான் நான் சொல்வேன்.”//

VERY GOOD POINT .... TO BE NOTED !

//(”அமுதம்’ மே 2014 இதழில் வெளியானது.)//

பாராட்டுக்கள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அமுதம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 2
என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஜீவநதி இதழ்லே:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

அட...! இதுவம் ஒரு நல்ல டெக்னிக்...!

ராமலக்ஷ்மி said...

நல்ல உத்தி. வெற்றி பெற வேண்டுமென்கிற எண்ணம் எதையும் சாதிக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

அட இது நல்ல உத்தியாக இருக்கிறதே...... வெற்றி பெற தூண்டுதலும் அவசியம் என்பதை அழகாய்ச் சொல்லிய பகிர்வு.

த.ம. +1

Thulasidharan V Thillaiakathu said...

அதான் இப்படி ஒரு சுயப் பொறுப்பை வலியுறுத்தும் சூழ்நிலையை தனக்குத்தானே ஏற்படுத்திக்கிறான். செய்ய நினைக்கிற சில விஷயங்களை செய்து முடிக்க இது ஒரு நல்ல, தோற்றுப்போக சாத்தியமில்லாத வழின்னுதான் நான் சொல்வேன்.”// அருமை! செம டெக்னிக்!!!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!