106
பெரும் துக்கத்துக்குப்
பின் வரும்
சந்தோஷம் போல
நீ.
<>
107
நான் இல்லாத நாட்களில் உன்
முகம் பார்க்கும் கண்ணாடியைத்
தொலைத்திருந்தாய் நீ.
<>
108
அந்த இரு கவிதைகளுக்குள்
ஆக்ரோஷமான விவாதம்
ஆர் உன்னை
சரியாக வர்ணித்ததென்று.
<>
109
உன் விழிகளில்
நீந்திடும் கனவுகளில் என்
வண்ணம் என்னவோ?
<>
110
எவ்வித கிட்டப் பார்வையோ
தூரப்பார்வையோ இல்லை
என் உணர்வுகளைப்
படிக்கையில் உனக்கு.
<>
111.
மிகுந்த பிரயாசைப்பட வேண்டியிருந்தது அவள்
அழகு விழுந்து விடாமல் சிரிப்பதற்கு
அவள்.
<>
112
உன்னை ஒரு பார்வை
வியந்து பார்த்துவிட்டு
தன்னை எழுதிக் கொண்டது
கவிதை.
><><><><
4 comments:
அனைத்துமே அருமை.
111 மிகவும் பிடித்தது.
விவாதத்தையும் ரசித்தேன்...
அனைத்துக் கவிதைகளும் அருமை! முகம் பார்க்கும் கண்ணாடி அருமை! அதைப் போல் ஒன்று நாங்களும் எழுதி வைத்திருந்தோம்.....ஆனால் இத்தனை அருமையாக அல்ல....!!
கவிதகளின் விவாதம் ஆஹா போட வைத்தது!
//உன்னை ஒரு பார்வை வியந்து பார்த்துவிட்டு தன்னை எழுதிக் கொண்டது கவிதை.//
அதனால்தான் அது அழகான கவிதையானது :)
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!