Friday, February 6, 2015

விசாலமாய் ஓர் இடம்…


அன்புடன் ஒரு நிமிடம் - 74

கொட்டித்  தீர்த்தாள்  கோமதி.
எப்படி  இருக்கிறான்  முருகேசன்?”   ஒரு  வரிதான்  கேட்டார்  சாத்வீகன்.
அதை  ஏன் கேட்கறீங்க?  ரிடயர்  ஆனதிலேர்ந்தே  பிரசினைதான்.   எப்ப  பார்த்தாலும் டென்ஷன்..  நாளின்  பாதி  நேரம்  அப்செட்  ஆகிப்போய்த்தான்  இருப்பார்.  மன அயர்ச்சிக்கு  ஒரு  கணக்கில்லை.  எரிச்சல்,  எரிச்சல்  எப்போதும்  எல்லாரிடமும் எரிச்சல்!’’
காரணத்தைக்  கேட்டபோது
‘’யாருமே  அவர்  பேச்சைக்  கேக்கிறதில்லையாம்.  முக்கியமா  அதான்… பிள்ளைங்களும்  சரி,  நண்பர்களும்  சரி,  ஏன்  என்னையும்  சேர்த்துத்தான்  சொல்வாருஅவர்  ஒண்ணை  சொன்னா  நாங்க  ஒண்ணு  செய்யறமாம்.  ஒவ்வொருத்தர்  பண்ற காரியங்களையும்  அவரால  சகிச்சுக்கவோ  ஏற்றுக் கொள்ளவோ முடியலே.  ஓயாம திட்டறார்…”
அடுக்கிக்  கொண்டேபோக, அத்தனையும்  கேட்ட  அவர்  ஒரு   உபாயம் சொன்னார். “…அப்படி  செய்து  பாரேன்...”
கொஞ்சம்  கூட  சம்பந்தமேயில்லாமல்   என்ன  கேட்க  வந்தா  என்ன  சொல்றார் இவரு?  சரி சரி,  என்று  சொல்லிவிட்டுப்  போனாள்.
ஆறு  மாதத்துக்குப்  பின்  ஒரு  நாள்.  தேடி  வந்திருந்தாள்.
அவர்  புருவம்  உயர்த்த  அவள்  புன்னகையே  பதில்  சொல்லிற்று.
பையை  நீட்டினாள்.  அப்போதுதான்  பறித்திருந்தவை.  பிஞ்சு  வெண்டைக்காய்களும்காரட்டும்,  கீரையும்….  கண்ணைப்  பறித்தன.
நீங்க சொன்ன மாதிரியே    அவரை  வற்புறுத்தி  வீட்டிலேயும்  குளக்கரை  பக்கத்தில வாங்கிப்  போட்டிருக்கிற  பத்து  செண்டு  நிலத்திலும்  காய்கறி  செடிகள்  வைக்க சொன்னேன்.   செய்ய  வைக்கிறதுக்குள்ளே  பெரும் பாடு.  ஒரு  வழியா  தொடங்கினார் வேலையை.   அப்புறம்  கொஞ்சம்  கொஞ்சமா  அவருக்கே  ஒரு  ஆர்வம்  வந்து…  இப்பஅதில  முழுக்க  இறங்கிட்டாரு.   இப்ப  அவர்  அனாவசியமா  டென்ஷன் ஆகிறதில்லே.  சிரிச்சுப்  பேச  ஆரம்பிச்சுட்டாரு.  எரிச்சல்னா  என்ன  விலைன்னுஆச்சரியம்  தாங்கலே  பசங்களுக்கெல்லாம்.   எப்படிம்மா  இதெல்லாம்னு….   எல்லாம் மாமா  ஐடியா,  எனக்கென்ன  தெரியும்னேன்.”
உனக்கே  தெரிஞ்ச  விஷயம்தானே  அது?  தனக்குத்  தெரிஞ்ச  விஷயங்களை பிரயோகிக்க  ஒரு  வழி,  தான்  நினைக்கிற  விஷயங்களை  எந்தவித எதிர்ப்புமில்லாமல்  அப்படியே  ஏற்றுக் கொள்ள  ஒரு  விசால  இடம்…  அதில் அவருக்குக்  கிடைக்கிற  ஆறுதல்!  அது  அவர்  எரிச்சலை,  யாருமே  நம்ம வார்த்தைகளை  காதில  போட்டுக்கிறதில்லேங்கிற  அந்த  எரிச்சலையெல்லாம் கரைத்து விடும்.
அது  மட்டுமில்லை,  செடிகளை  நட்டு  வளர்க்கும்போது  நாம  நினைக்கிறபடி அவைகளை  கொண்டுவர  முடியாது.  எட்டிப்  பார்க்கும்  இடைஞ்சல்களை  எல்லாம் உடனே  களைஞ்சுட  முடியாது.  ஏற்றுக்  கொண்டுதான்  ஆகணும்.  எதிர்பார்க்கிற பலனைத்  தராது.  அந்த  மாதிரி  நேரத்தில்  எல்லாம்  அவர்   தெரிஞ்சிக்கிறது என்னவாயிருக்கும்?  நம்  கையில  இல்லை  இது,  வளர்கிற  சூழ்நிலை,  பருவ  மாற்றம்கிடைக்கிற மழைன்னு  பல  விஷயங்கள்  சேர்ந்துதான்  அதன்  போக்கைத் தீர்மானிக்கும்கிறதைத்தான்,  இல்லையா?  இந்த  விஷயம்  அவர்  உள்  மனசுக்குப் போகப்போக  தன்  பிள்ளைகள்  விஷயத்திலும்  இப்படி  பல  காரணங்கள்  சேர்ந்துதாம் அவர்கள்  போக்கைத்  தீர்மானிக்கின்றன  என்கிறதையும்  மெல்ல  மெல்ல  புரிஞ்சுக்க ஆரம்பிக்கிறார்.  ஆக,   இது  உதவலாம்னு  நினைச்சேன்….

(’அமுதம்’  ஏப்ரல் 2014 இதழில் வெளியானது)
><><><

5 comments:

ராமலக்ஷ்மி said...

/எட்டிப் பார்க்கும் இடைஞ்சல்களை எல்லாம் உடனே களைஞ்சுட முடியாது. / அழகாய் உணர்த்துகிறது கதை.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

மெல்ல மெல்ல புரிதல்... அருமை...

வெங்கட் நாகராஜ் said...

அருமையான யோசனை தான்.....

த.ம. +1

வை.கோபாலகிருஷ்ணன் said...

//செடிகளை நட்டு வளர்க்கும்போது நாம நினைக்கிறபடி அவைகளை கொண்டுவர முடியாது. எட்டிப் பார்க்கும் இடைஞ்சல்களை எல்லாம் உடனே களைஞ்சுட முடியாது. ஏற்றுக் கொண்டுதான் ஆகணும். எதிர்பார்க்கிற பலனைத் தராது. //

அருமை.

//’அமுதம்’ ஏப்ரல் 2014 இதழில் வெளியானது//

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!