Wednesday, February 25, 2015

நல்லதா நாலு வார்த்தை - 43.


‘வழக்கம் என்பது
இரும்பினால்
வார்க்கப்பட்ட சட்டை.’
- Proverb
('A habit is a shirt made of iron.'
<>

‘நாட்கள் ஒவ்வொன்றும் 
நல்கிடுமே 
தனக்கேயுரிய பரிசுகளை!’
- Marcus Aurelius
(‘Each day provides its own gifts.’
<>

‘வலிமையும் வளர்ச்சியும்
தொடர்ந்து முயல்வதிலும்
அரும்பாடு படுவதிலுமே
வருவது.’
- Napoleon Hill
(‘Strength and growth come only through
continuous effort and struggle.’)
<>

‘புன்னகை என்பது 
எல்லாவற்றையும் நேராக்கும் 
ஓர் வளைவு,’
- Phyllis Diller
(‘A smile is a curve that
sets everything straight.’)
<>

‘மலர்கள்
மகிழ்வானவை’.
- P.G.Wodehouse
(‘Flowers are happy things.’)
<>

’சந்திப்போம் 
ஒருவரை ஒருவர்
எப்போதும் 
ஓர் புன்னகையுடன்!
அன்பின் தொடக்கம் 
அதுதானே?’
- Mother Teresa
(‘Let us always meet each other with a smile,
for the smile is the beginning of love.’)
<>

'வாழ்க்கை உண்மையில்
எளிதானது,
ஆனால் அதை
சிக்கலாக்கிக் கொள்வதென்று
அடம் பிடிக்கிறோம்.’
-Confucius
(‘Life is really simple but we insist
on making it complicated,’)

><><><

(படம் - நன்றி: கூகிள்) 

7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

'///வாழ்க்கை உண்மையில்
எளிதானது,
ஆனால் அதை
சிக்கலாக்கிக் கொள்வதென்று
அடம் பிடிக்கிறோம்.’////
ஆகா எவ்வளவு பெரிய உண்மை
எளிமையான வார்த்தைகளில்
அருமை
நன்றி நண்பரே
தம +1

Rekha raghavan said...

அனைத்தும் அருமை.தொடரட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான சிந்தனை.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பின் தொடக்கம் ஆகா...!

வழக்கம் பழக்கமாக வேண்டும்...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

எல்லாம் அருமை சகோ

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமையான பொன்மொழிகள். முதலாவது சிந்திக்க வைக்கிறது. புன்னகை குறித்த வரிகள் அழகு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//‘புன்னகை என்பது எல்லாவற்றையும் நேராக்கும் ஓர் வளைவு,’//

அருமை + உண்மை. :)

பாராட்டுக்கள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!