Saturday, February 21, 2015

44 பேரும் அவனும்...

                                                               
அன்புடன் ஒரு நிமிடம் - 75
ந்தவரின் கையில் ஒரு பெரிய லிஸ்ட் இருந்தது. 
”அப்பாடா ஒரு பெரிய ஜாப் முடிந்தது நல்லபடியா.” என்றார்.
”வாங்க வாங்க,“ என்றார் சாத்வீகன். “ரமேஷ், உங்க பையன் பிரமாதமா மார்க் வாங்கியிருக்கிறானாமே பிளஸ் டூவில்? இனிமேல் எதில் சேரப் போகிறான்?”
“அந்த வேலைதான் ஒரு வழியா முடிஞ்சதுன்னு சொன்னேன்.”
“அப்படியா? காலேஜில் சேர்ந்துட்டானா?”
“நோ. நோ. எதிலே சேர்க்கிறதுன்னு முடிவு பண்ணியாச்சு. அதானே முக்கியம்? மெடிகலா எஞ்சினீயரிங்கா, காமெர்ஸா, இல்லை, மானேஜ்மெண்டா…”
“ஆமா அவன் எதிர்காலத்தை நிர்ணயிக்கிற விஷயம் ஆச்சே? எப்படி முடிவாச்சு?”
”விடுவேனா?” லிஸ்டைக் காட்டினார். “மொத்தம் 42 பேர். எனக்குத் தெரிஞ்சவங்க, அவங்க வழியாக அறிமுகம் ஆனவங்கன்னு… புரஃபசர், டாக்டர், எஞ்சினீயர், கம்பெனி சி.இ.ஓ, அப்படீன்னு நான் கையிலே தயாரிச்சு வெச்சிருந்த பட்டியல்.”
பிரமிப்பானார்.
“ஒருத்தர் விடலே. எல்லாரையும் நேரிலேயே போய்ப் பார்த்து விலாவாரியா கேட்டுட்டேன். எந்தக் கரீயர் நல்லதுன்னு… நிறைய கேள்விகள் கேட்டு அவங்க அபிப்பிராயத்தை தெரிஞ்சுக்கிட்டேன்.”
“ஆக மொத்தம் 42 கருத்துக்கள்?”
“ஆமா.”
”அப்புறம் வேறே யாரைக் கேட்டீங்க?”
“எங்க அப்பாவைக் கேட்டேன். பிறகு என் மாமனார். .அவ்வளவுதான்!”
”ஓ?”
“எல்லாவற்றையும் வைத்து  நாலு நாள் அமர்ந்து  நானும் மனைவியுமாக அலசி முடிவு எடுத்தோமாக்கும்.ஒருத்தர் சொன்ன ஒரு பாயிண்டையும் விடாமல்.”
“ஆஹா! அப்படி எடுத்த முடிவு என்னவோ?”
சொன்னார். கேட்டுக் கொண்ட சாத்வீகன் அவர் கையைப் பிடித்து குலுக்கினார். “க்ரேட்! நல்லாவே சிரமப் பட்டிருக்கீங்க. உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும். ஆனால் ஆனால்..”
புகழ்ச் சுமையில் தலை குனிந்த அவர் நிமிர்ந்தார். “என்ன ஆனால்?”
“ஆனால் ஒரு முக்கியமான நபரோட அபிப்பிராயம், அதைக் கேட்காமல் விட்டிட்டீங்களே? அவரை எப்படி மறந்தீங்க?”
லிஸ்டை அவசரமாகத் துழாவினார். “அப்படி யாரும் விட்டுப் போகலியே? யார்…யார் அது, அத்தனை முக்கியமான ஆளு?”
சிரித்தார். “உங்க பையனைத்தான் சொல்றேன். இந்த 44 பேர் சொன்னதும் எத்தனை முக்கியமோ அதன் மொத்த அளவு முக்கியம் அவன் என்ன சொல்கிறான் என்பது!. எந்த கரீயர் அவனுக்கு ரொம்பப் பிடிக்கிறது, அவன் மனசில் வளர்ந்து விட்டிருக்கிற ஆவலும் ஆர்வமும் எந்தத் துறையை நோக்கி இதுகாறும் செலுத்தப்பட்டிருக்கிறது, எதில் தன் திறமையைக் காட்ட அவன் துடிக்கிறான், எதில் அவனுக்கு நல்ல நேக் (knack)  இருக்கிறது, யாரைப் பார்த்து அவன் தன் ஐடியல் இவர்னு நினைச்சு வந்திருக்கிறான், எந்தப் படிப்பு அவன் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பதோடு மத்தவங்களுக்கும் பயனுள்ளதா மாறும் சாத்தியதை அதிகம் கொண்டிருக்கிறது….இதெல்லாம் அவனைக் கலந்து ஆலோசிச்சாத்தானே தெரியும்? என்ன நான் சொல்றது?”
அவர் ஒன்றும் பேசவில்லை. கிளம்பினார் மகனுடன் உட்கார்ந்து பேச.
('அமுதம்’ மே 2014 இதழில் வெளியானது.)
(படம் - நன்றி: கூகிள்)


7 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

நன்றாக உள்ளது இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான முடிவு... (வழிகாட்டல்)

ரிஷபன் said...

முக்கியமான நபரைத்தான் கடைசியாய் கலந்து பேசி இருக்கிறார்

Rekha raghavan said...

சரியான முடிவை எடுக்க வழி காட்டிய சாதிவீகனுக்கு ஒரு பூங்கொத்து!

ஷைலஜா said...

நன்றாக இருக்கிறது ஜனா

ராமலக்ஷ்மி said...

சரியாகச் சொல்லியிருக்கிறார்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எந்த கரீயர் அவனுக்கு ரொம்பப் பிடிக்கிறது, அவன் மனசில் வளர்ந்து விட்டிருக்கிற ஆவலும் ஆர்வமும் எந்தத் துறையை நோக்கி இதுகாறும் செலுத்தப்பட்டிருக்கிறது, எதில் தன் திறமையைக் காட்ட அவன் துடிக்கிறான், எதில் அவனுக்கு நல்ல நேக் (knack) இருக்கிறது, யாரைப் பார்த்து அவன் தன் ஐடியல் இவர்னு நினைச்சு வந்திருக்கிறான், எந்தப் படிப்பு அவன் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பதோடு மத்தவங்களுக்கும் பயனுள்ளதா மாறும் சாத்தியதை அதிகம் கொண்டிருக்கிறது….//

ஆம் இது தான் மிகவும் முக்கியம்.

//('அமுதம்’ மே 2014 இதழில் வெளியானது.)//

பாராட்டுக்கள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!