Sunday, February 15, 2015

அவள் - 16.


99.
நீ
நான்
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு…
<>

100.
அப்படியே இருக்கிறாய் நீ
எத்தனை மாற்றம்
எனக்குள்!
<>

101.
எங்கிருந்து முளைத்தன
அவ்விரு சிறகுகள்
உன்னை நினைத்ததும்
இதயத்துக்கு?
<>

102.
எல்லாவற்றையும் மறந்து
இதம் பெற்றிடும்
இசை போலும் நீ.
<>

103.
ஆயிரத்தில் ஒரு பங்கே உன்
அழகை ரசிக்க முடிகிறது,
999 –ம் உன் வெட்கத்துக்குள்
ஒளிந்து கொண்டு.
<>

104.
இருக்கட்டும் இருக்கட்டும் 
நீயே வைத்துக்கொள்
இழந்தபின்தான் எத்தனை நிம்மதி 
இதயத்தை உன்னிடம்!
<>

105.
கடவுள் என்னைக்
கைவிடவில்லை:
உன்னைக்
கைகாட்டினாரே.


><><><

7 comments:

ADHI VENKAT said...

//நீ
நான்
இரண்டு
மூன்று//

கவர்ந்தது.

அத்தனையுமே அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை.

//அப்படியே இருக்கிறாய் நீ எத்தனை மாற்றம் எனக்குள்!//

:)))))

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
உள்ளம் கவர்ந்த வரிகள் இரசித்தேன் த.ம2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

105 அட...!

Rekha raghavan said...

அனைத்தும் அருமை. 105 க்ளாஸ்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை நண்பரே

ஷைலஜா said...

ஆஹா சின்னச்சின்ன வரிகளில் பெரிய பெரிய அர்த்தங்கள்! அருமை திரு ஜனா

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!