கரைந்திடும் மழை மட்டும் மனக்
கவலையை கரைக்க முடியுமானால்?
வீசிடும் தென்றல் மட்டும் சற்றே
வெஞ்சினம் அகற்ற முடியுமானால்?
விழுங்கிடும் இனிப்பு மட்டும் மன
எரிச்சலைக் குறைக்க முடியுமானால்?
பளிச்சிடும் மின்னல் மட்டும் வீண்
பயங்களைக் கொய்ய முடியுமானால்?
முழங்கிடும் இடி மட்டும் பல
முனகல்களை நிறுத்த முடியுமானால்?
படர்ந்திருக்கும் பச்சை மட்டும் சில
பார்வைகளை மாற்ற முடியுமானால்?
வண்ணம் தீட்டும் வானவில் மட்டும்
எண்ணம் தீட்ட முடியுமானால்?
முடியாதெனினும் ஒரு கண சுகம்
நினைத்துப் பார்ப்பதில்...
<<<>>>
13 comments:
//முடியாதெனினும் ஒரு கண சுகம்
நினைத்துப் பார்ப்பதில்...//
அத்தனையையும் எண்ணிப் பார்த்து நாங்களும் சுகம் அடைய அருமையான கவிதையாய்.
//முடியாதெனினும் ஒரு கண சுகம்
நினைத்துப் பார்ப்பதில்...//
ஒரு வித திருப்தியும், சந்தோஷமும் தான்.....
ஒவ்வொன்றும் அருமையான வரிகள் சார்.
//முடியாதெனினும் ஒரு கண சுகம்
நினைத்துப் பார்ப்பதில்...//
முடியாதெனினும் எதையுமே கற்பனை செய்து பார்ப்பதில் ஒரு கண சுகம் நிச்சயமாகக் கிடைக்கிறது என்பது உண்மையே!
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
இதை வெறும் வார்த்தைகளால் பாராட்ட முடியாதெனினும்...
ரொம்ப நல்லாயிருக்கு சார்! :-)
அருமை
கற்பனை தரும் அற்புத சுகம்
கண நேரம்தான் ஆயினும்
அதன் சுகமே தனி
அதை மிக அழகாகச் சொல்லிப் போகும்
தங்கள் படைப்பு அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
tha.ma2
ரொம்ப நல்லா இருக்கு சார்....
முடியாதெனினும் ஒரு கண சுகம்
நினைத்துப் பார்ப்பதில்...
ஆஹா... அந்த முத்தாய்ப்பு வரிகள்... அருமை! ‘பா’வை மிக ரசித்தேன்!
வணக்கம்!
// முடியாதெனினும் ஒரு கண சுகம்
நினைத்துப் பார்ப்பதில்.. //.
சுகமான சிந்தனைகள்!
கிடைக்காத ஒரு சுகத்தை நினைத்துப் பார்ப்பதில்தான் எத்தனை சுகம்.மிக அற்புதமான சிந்தனை !
கவிதையில் முடிந்ததே..
/முடியாதெனினும் ஒரு கண சுகம்
நினைத்துப் பார்ப்பதில்.../
இயலாது இதை மறுக்க...
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!