ஐ பாட் ஸ்பீக்கரை காதில் செருகியபடியே
சமையலைக் கவனித்துக் கொண்டிருந்த மனைவி பத்மாவைப் பார்க்கப் பார்க்க பாஸ்கருக்கு எரிச்சலாக வந்தது.
அவளைக் காதலித்து மணந்தவன் அவன். பெரிய
சங்கீத வித்வானான தந்தையைப் பகைத்துக் கொண்டு பதிவுத் திருமணம் செய்து
கொண்டவனுக்கு அவளிடம் பிடிக்காத ஒரே விஷயம் இது தான்.
லேசாய்ச் சொன்னால் கேட்பதாயில்லை.
அன்றைக்கு சண்டை பெரிதாகிவிட்டது. “அப்படி என்ன எப்பவும் பாட்டு வேண்டிக்கிடக்கு?’’
அவள் சொன்னாள் : “உங்கப்பாவோட சண்டை போட்டுட்டு அவர் மேலே உள்ள கோபத்தில் அவர் சம்பந்தப்பட்ட
எந்தப் பொருளைக் கண்டாலும் வெறுக்கறீங்க. ஆனா நானோ ஆர்வத்தோடு அவர்கிட்டே சங்கீதம்
படிக்க வந்து அங்கே உங்களை சந்தித்து காதலித்து கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். அவரோட உயர்ந்த இசையைக் கேட்காம என்னால இருக்க முடியலே. அதான் உங்களுக்குக் கேட்காத
விதத்தில் மாமாவோட பாட்டைக் கேட்டு ரசிக்கிறேன். தப்பாங்க?’’
பாஸ்கருக்குக் கோபம் வரவில்லை.
<<<<>>>>
(குமுதம் 27-08-2008 இதழில் வெளியானது)
13 comments:
அருமை. வெகு அருமையான பதில்.
பத்மாவின் காதலுக்கும் கல்யாணத்திற்கும் காரணமே அந்தப்பாட்டு கற்றுக்கொள்ள வந்த இடம் தானே!
குமுதம் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.
சங்கீதக் காதல் சண்டைக் காதலாகி முடிவில் சந்தோஷக் காதலானது அருமை.
அருமையான கதை. பத்மாவின் பதில் அருமை.
குமுதத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள் சார்.
அருமையான அழகான சிறுகதை.. பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
கதை நன்றாக இருக்கிறது.
குமுதத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
அழகிய குறுங்கதை...
சுருக் என்றாலும் கதை நறுக்
முடிவாகச் சொல்லியுள்ளவிதம்
மனம் கவர்ந்தது
மனம் கவர்ந்த பதிவு
அழகிய சிறுகதை....
கதை நன்றாக இருக்கிறது.
குமுதத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
கணவனையும் மனம் நோகச் செய்யக்கூடாது. மாமனார் மேலுள்ள பக்தியையும் குறைக்கமுடியாது. அவர் சங்கீதத்தையும் வெறுக்க முடியாது. இந்தச் சூழலில் ஒரு பெண் எடுத்திருக்கும் அருமையான முடிவை அழகானக் கதையாக்கியமைக்குப் பாராட்டுகள்.
உங்கள் கதை ஆலாபனையே அழகு.
கதை நன்றாக இருக்கிறது.
குமுதத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
வணக்கம்! நல்ல கற்பனை! 2008 – இல் வந்த கதையின் நிகழ்வு, இன்றும் சமையலறையில் காணும் நிகழ்ச்சிதான்.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!