அன்புடன் ஒரு நிமிடம்... - 2
முழுமையாக ஒரு வாழ்த்து...
''என்ன ஞாபகம் வெச்சாலும் மறந்துடுது!'' அலுத்துக் கொண்டான் பரசு, ''Complimentary, Complementary இந்த ரெண்டு வார்த்தையும் குழப்புது என்னை... ''
''ரொம்ப சுலபம்,'' என்றார் வாசு. அப்பா. ''Complimentary என்பது வாழ்த்துவது. நாம முதல்ல தெரிஞ்சுக்கிட்ட வார்த்தை இதுவாத்தான் இருக்கும். வாழ்த்தறதுன்னு அர்த்தம்.''
''அது தெரிஞ்ச மறக்காத விஷயம், சரி, அடுத்தது?''
''Complementary அப்படீங்கிறது முழுமையாக்குவது என்கிற அர்த்தத்தில் வருவது. முழுமைக்கு என்ன வார்த்தை? Complete அதனால Comple என்று i -க்குப் பதிலா e வருது. அப்படி ஞாபகம் வெச்சுக்கலாமே! தவிர அர்த்தத்தை வைத்துப் பார்க்கையில் அது ஒரு அழகான வார்த்தையும் கூட. ஒன்றை ஒன்று முழுமையாக்குவது.''
கொஞ்சம் சுவாரஸ்யம் தட்டிற்று பரசுவுக்கு.
''அப்புறம் அது முக்கியமான வார்த்தையும் கூட. வாழ்க்கையில நமக்குக் கிடைக்கிற எந்த சம்பத்துமே வாழ்க்கையை முழுமையாக்குவதாக இருக்க வேண்டும் அப்பத்தானே அழகு? பயன்?''
''நிச்சயமா.''
''கணவனும் மனைவியும் எடுத்துக் கொண்டால் இவனிடம் சில நல்ல குணங்கள் இருக்கும். அவளிடம் சில இருக்கும். ரெண்டும் ஒரேமாதிரியாக இல்லாமல் இவனிடமில்லாத சிலது அவளிடமும், மாற்றியும் அமைந்தால் அது அந்த அளவில் Complementary தானே?''
''கண்டிப்பா!''
''அந்தக் காலத்தில், அதாவது கூட்டுக் குடும்ப காலத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்று குடும்பம் என்ற அமைப்பு முழுக்க முழுக்க மொத்தத்தில் Complementary ஆக அமைந்திருந்ததால், குழந்தைகளுக்கு அதுவே அவர்களின் வாழ்க்கையின் மாபெரும் இயங்கு முன்னேற்ற தளமாக இருந்தது. இப்ப அதை நாமே ஒதுக்கி வைத்துவிட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அந்த Complementary -யின் ஒவ்வொரு அங்கமாக சேகரிக்க வெளியில் ஓடுகிறோம். அப்ப தாத்தா படம் வரையக் கற்றுக் கொடுப்பார். எப்படி? ஆர்வத்தோட படிக்கிற மாதிரி. பாட்டி பழமொழிகளில் தொடங்கி, பக்திப் பாடல் படிக்க வெச்சு, ப த நி ஸ வரை சொல்லிக் கொடுப்பா. சித்தப்பா அல்லது மாமா பேட்மிண்டன் கத்துக் கொடுப்பார். எல்லாம் ஒரே இடத்தில நடந்திரும். இப்ப நாம அவனை அழைச்சிட்டு நீச்சல் கிளாஸ், ம்யூசிக் கிளாஸ், டிராயிங் கிளாஸ் அப்படீன்னு பேட்டை விட்டு பேட்டை அலையறோம் அந்த Complementary - யின் ஒவ்வொரு அம்சத்துக்கும்!''
''அட, ரொம்ப யோசிக்க வைக்கிறீங்களே?''
''அத்தனைக்கத்தனை நல்லது. அந்த ரெண்டு வார்த்தைகளும் மறக்காது இல்லையா?''
கேட்டுக் கொண்டிருந்த தாத்தா தனக்குள் சொல்லிக் கொண்டார்.''அட, யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இனி நல்லது தான் நடக்கும்.''
<<<<>>>>
13 comments:
சுவாராசியமான பதிவு. உண்மையில் இந்த இரண்டு வார்த்தைகளையும் பற்றி முழுமையாக இன்றுதான் தெரிந்து கொண்டேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
SUPER..JANA SIR!
அட இந்த இரண்டு வார்த்தைகளுக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்குன்னு நீங்க சொல்லித்தான் தெரியுது. சொல்லிக்கொடுத்த வாத்தியாரே,நன்றி!
'அட, யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இனி நல்லது தான் நடக்கும்.''
;))))) அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்.
ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க சார். ஒரு வார்த்தைக்குள் தான் எவ்வளவு அர்த்தங்கள்.....
அந்தக் காலத்தில், அதாவது கூட்டுக் குடும்ப காலத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்று குடும்பம் என்ற அமைப்பு முழுக்க முழுக்க மொத்தத்தில் Complementary ஆக அமைந்திருந்ததால், குழந்தைகளுக்கு அதுவே அவர்களின் வாழ்க்கையின் மாபெரும் இயங்கு முன்னேற்ற தளமாக இருந்தது. இப்ப அதை நாமே ஒதுக்கி வைத்துவிட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அந்த Complementary -யின் ஒவ்வொரு அங்கமாக சேகரிக்க வெளியில் ஓடுகிறோம்.
அருமையான வார்த்தைகள்.
நல்லா இருக்கு சார்....
இப்படி இரண்டு வார்த்தைகளை வைத்து ரெம்பவே யோசிக்க வெச்சுட்டீங்களே ஜனா...
Madhumitha Muralidharan says:
Very Good One.
வார்த்தைகளின் சக்தியும் யுக்தியும் உங்கள் இந்தப் பதிவில்.குழந்தைகளுக்குச் சொல்வதுபோல நிதானமாகச் சொல்லப்பட்டிருக்கிறது !
எதாவது ஒரு தமிழ் மேகஸின்ல இதை ஒரு பத்தியா ஆரம்பிக்கலாமே சார்! நல்லா போகுது!! :-)
அழகான விளக்கம். என்றைக்கும் மறவாததும் கூட. பகிர்வுக்கு நன்றி.
fine jana. very useful article. especially the youth should read this must.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!