Saturday, December 4, 2010

வேகம்



ரியிட்ட காகிதத்தைப்
பார்க்கும் போதெல்லாம்
வரிந்தெழுதத் தோன்றுகிறது
உடனடியாய் ஒரு கவிதை.

ருகிற கவிதை வரிகளோ
சாயம் பூசியதாய்
யார் மனதிலும்
மாயம் புரியாததாய்
சில சமயம்
எனக்கே அந்நியமாய்
.

னதில் முளையிட்ட அனுபவம்
தன்னுணர்வுடன் வெளிப்படுகையில்
மட்டுமே அல்லவா
தேடவேண்டும் நான்
தாளையும் பேனாவையும்?


----

11 comments:

Rekha raghavan said...

//சாயம் பூசியதாய்
யார் மனதிலும்
மாயம் புரியாததாய்//

அருமை. கவிதைன்னா எப்படி இருக்கணும்னு புரிய வைத்ததற்கு நன்றி.

ரிஷபன் said...

உண்மைதான்.. ஆனால் எழுதி எழுதித் தானே மெருகேற முடியும்.. இப்போது உங்கள் கவிதையும் அப்படித்தானே ஜொலிக்கிறது.. சொல்ல வந்த கருத்தை அழகாய்ச் சொல்லி!

Anonymous said...

ரிஷபன் கருத்தை வழிமொழிகிறேன் :)

ராமலக்ஷ்மி said...

வேகம் விவேகம் அல்லதான். கவிதை அருமை.

//ஆனால் எழுதி எழுதித் தானே மெருகேற முடியும்.. இப்போது உங்கள் கவிதையும் அப்படித்தானே ஜொலிக்கிறது.. சொல்ல வந்த கருத்தை அழகாய்ச் சொல்லி!//

ரிஷபன் அவர்களை வழிமொழிகிறேன்.

CS. Mohan Kumar said...

உண்மையே. கவிதை இயல்பாய் வர வேண்டும்

Chitra said...

very nice.

சிவராம்குமார் said...

பாருய்யா! கவிதையை வெச்சே ஒரு கவிதை!!! கலக்கல்!

vasu balaji said...

க்ளாஸ்

Bagavath Kumar.A.Rtn. said...

கவிதை எப்போ வரணும்னு கவிதையிலே ஒரு சாடல் !!

Suganthan said...

கவிதையின் இலக்கணக் கவிதை அருமை.

கே. பி. ஜனா... said...

நன்றி: ரேகா ராகவன்! நன்றி:ரிஷபன்! நன்றி: Balaji Saravana! நன்றி:திகழ்! நன்றி:ராம லக்ஷ்மி! நன்றி:Chitra! நன்றி:சிவா! நன்றி:மோகன்குமார்! நன்றி:வானம்பாடிகள்! நன்றி:Bhagavath Kumar! நன்றி:Suganthan!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!