
ஒய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா தங்கள் வயலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். பயிர்களெல்லாம் விளைந்து அறுவடைக்குத் தயாராக. மத்தியான சாப்பாட்டை வயலுக்கே எடுத்து வரும்படி சொல்லியிருந்தார் மனைவியிடம்.
தூரத்தில் வரும்போதே கோமதியின் நடை தளர்ந்திருந்ததைக் கவனித்தார். புரிந்தது அவருக்கு. மகனைப் பற்றிய கவலை. வெளியூருக்கு மேல்படிப்புக்காக செல்லப்போகும் அவன் பிரிவை எண்ணி! மரத்தடியில் வரப்போரமாக அவர் அமர்ந்துகொள்ள, பதார்த்தங்களோடு வார்த்தைகளையும் பரிமாறலானாள்
''என்னங்க, பையனை இத்தனை தூரம் அனுப்பணுமா? சின்னப் பையன், அவனுக்கு என்ன தெரியும்? நமக்குத்தான் ஊரிலே நிலம், வீடு எல்லாம் இருக்கே, நம்மோட நின்னு இங்கேயே வளரட்டுமே? பக்கத்து ஊர் காலேஜிலேயே முடிஞ்ச மட்டும் படிக்கட்டுமே? பத்திரமா நல்லா பாத்துக்கலாமில்லையா? ''
''உன் கவலை எனக்குப் புரியாம இல்லே கோமு,'' என்றார் கனிவாக.
''எனக்கும் அதே கவலைதான். இதோ இந்த மரத்தடியிலே நிக்கிற பயிர் எல்லாம் நிழல்லே சொகுசா இளைப்பாறுது. மத்த பயிர் எல்லாம் வெயில்லே வாடுது. இது மாதிரி தானே நம்ம பையனும் வாடுவான் அங்கே?''
கோமதி அந்தப் பயிர்களைப் பார்த்தபடியே தலையாட்டினாள், ''ஆமாங்க.''
''ஆனா நீ இன்னொண்ணைக் கவனிச்சியா? இந்தப் பயிர்கள் எல்லாம் எப்படி வளர்ச்சி குறைவா, விளைச்சல் குறைவா இருக்கு தேவையான வெயில் கிடைக்காம? அதுபோலத்தான் நம்ம பையனும்! வெளியுலக வெளிச்சம் அவனுக்குத் தேவை. தகுந்த மதிப்பெண் இருக்கிறதாலே சென்னையிலே நல்ல காலேஜில் அட்மிஷன் கிடைச்சிருக்கு. விளையும் பயிர் அவன். அவனைப் போய் பாதுகாப்புக் கயிற்றாலே கட்டிப் போடலாமா?''
அவர் இதமாக எடுத்துச் சொன்னதைப் பதமாகப் புரிந்து கொண்டாள் அந்த அன்னை.
('குமுதம்' 24-01-05 இதழில் வெளியானது)
13 comments:
/////அவர் இதமாக எடுத்துச் சொன்னதைப் பதமாகப் புரிந்து கொண்டாள் அந்த அன்னை.////
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் தானே...
வெளியுலக வெளிச்சம் அவனுக்குத் தேவை. தகுந்த மதிப்பெண் இருக்கிறதாலே சென்னையிலே நல்ல காலேஜில் அட்மிஷன் கிடைச்சிருக்கு. விளையும் பயிர் அவன். அவனைப் போய் பாதுகாப்புக் கயிற்றாலே கட்டிப் போடலாமா?''
...good advice.
நிதர்சனம் :)
விளை நிலத்தோடு கல்வி (மனதில் விளைவது)யை ஒப்பிட்டு கதையாக்கியது அருமை
ஆசிரியர் தந்த நல்ல அறிவுரை - மனைவிக்கு! மகனும் ஒரு விளையும் பயிர் - அழகு.
குட்டி கதை, ஆனால் மிக மிக உயர்ந்த கருத்து. அதே நேரம் குழந்தைகளும் தாய் தந்தையர் தரும் சுதந்திரத்தை சரியே பேணி வாழ் கற்றுக் கொள்ள வேண்டும். :)
good one sir:)
நல்ல கதை.
Arumai. There is a lesson in this story for me too as a father.
வெளிச்சம் - படிக்கிறவர் மனசிலும்.
வணக்கம்
20,012013இன்று உங்களின் படைப்பு வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமானது பாராட்டுக்கள் அருமையான பதிவு நல்ல கருத்தை விதைத்துள்ளீர்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விளையும் பயிர் அவன். அவனைப் போய் பாதுகாப்புக் கயிற்றாலே கட்டிப் போடலாமா?''
அருமையான கதை ..
வலைச்ச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
'ஆனா நீ இன்னொண்ணைக் கவனிச்சியா? இந்தப் பயிர்கள் எல்லாம் எப்படி வளர்ச்சி குறைவா, விளைச்சல் குறைவா இருக்கு தேவையான வெயில் கிடைக்காம? அதுபோலத்தான் நம்ம பையனும்! வெளியுலக வெளிச்சம் அவனுக்குத் தேவை. தகுந்த மதிப்பெண் இருக்கிறதாலே சென்னையிலே நல்ல காலேஜில் அட்மிஷன் கிடைச்சிருக்கு. விளையும் பயிர் அவன். அவனைப் போய் பாதுகாப்புக் கயிற்றாலே கட்டிப் போடலாமா?''//
வெளிஉலக வெளிச்சம் தேவைதான் குழந்தைகளுக்கு.
அருமையான கதை.
இன்று வலைச்சரத்தில் வைடூரியமாய் ஜொலிப்பதற்கு
வாழ்த்துக்கள்.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!