உள் காயம்
கையின் மணிமுட்டிக்கருகே
அந்தக் காயம்.
ஆழமானது அல்லதான்.
ஆனாலும் அது என்னைப்
பாடாய்ப் படுத்திற்று.
சுற்றியுள்ள வீக்கம்
சிறு மேடாயினும் என்னைச்
சிணுங்க வைத்தது.
துடித்துத்தான் போனேன்.
காயம் இருந்தது
என் மகள் கையில் அல்லவா?
###உயர மயக்கங்கள்
அடித் தண்டில் ஏற ஆரம்பிக்கையில்
அந்த அணிலுக்குத் தெரியவில்லை
போய்க்கொண்டேயிருக்கும்
அதன் உயரம் என்று.
என்றாலும் ஏறிச் சென்றது
தென்னையின் மேலே மேலே.
மயக்கம் வருகிற வரையில்.
தொடரவும் துணிவின்றி
தாவவும் அருகில் கிளையின்றி
செங்குத்தாக இறங்கவும் தயங்கி
நின்றிருந்த ஒரு கணத்தில்
உலக மொத்தத்திலிருந்தும் தன்
தனிமையை உணர்ந்தது.
###
14 comments:
இரண்டும் அருமை. "உள் காயம்" மிகவும் ரசித்தேன்.
top
கவிதைகள் இரண்டும் அருமை...
தொடரும் உங்கள் வலைப்பூ முயற்சி அதிசயிக்க வைக்கிறது.
”உள்காயம்” - ரொம்ப பிடித்து இருந்தது. கடைசி வரி கலக்கல்.
இரண்டாவது கவிதையும் அழகு. தனிமையை உணரும் கட்டம் சொல்லியவிதம் அழகு.
முதலாவது நெகிழ்ச்சியளித்தது. இரண்டாவது அட! போட வைத்தது.
இரண்டுமே அருமையாய் இருந்தது. ”உள் காயம்” முதல் இடத்தில்.
இரண்டு கவிதைகளுமே சூப்பர். காயம் மகளுக்கெனில் உள் காயம் ஆவது அருமை. இரண்டாவதும் உயர்ந்த விஷயத்தை அழகாய் சொல்லியது.
அருமையான சிந்தனை வரிகள் . வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி
அணிலுக்கு வந்த பிரமிப்பு.. கவிதைகளை வாசிக்கும் எனக்கும்.
இரண்டும் அருமை!!
ஹ்ம்ம் எப்போதாவது ஒரு கணம் நாம் தனிமை பட்டுத்தான் போகிறோம் உயரங்களை நோக்கி போகும் சமயம் ..
நன்று
சார்....
இரண்டு கவிதைகளுமே அருமை...
அதிலும் அந்த “உள்காயம்” படு சூப்பர்....
உள் காயம் மிகவும் அருமை.
முதல் கவிதை முதல் தரமான கவிதை! நீங்களே எழுதினதா இல்லே யாராவது மண்டபத்துல கொடுத்ததா?:)
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!