Saturday, April 17, 2010

திறமை


ப்பா, அம்மா, அண்ணன், அக்கா எல்லார் மேலும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது ரவீனுக்கு,
சொல்லி வைத்தது மாதிரி எல்லாரும் கைவிரித்து விட்டனர்.
முதலில் அப்பா.
''எனக்கு கொஞ்சம் அனிமல்ஸ் படம் போட்டுத் தாங்கப்பா''
''என்ன விஷயம்டா?''
''டீச்சர் ஒரு பக்கம் நிறைய அனிமல்ஸ் படம் போட்டுட்டு வரச் சொன்னாங்க. எனக்குப் படம் போட வராது, அதான்...''
'' ஐயையோ,'' என்றார் தியாகு, ''அப்பாவுக்கு ஆபீஸ் பெண்டிங் வொர்க் இருக்கே? அர்ஜண்டா முடிக்கணுமேன்னு ஃபைலை வீட்டுக்கு எடுத்திட்டு வந்தேன். ஸாரிடா, அம்மா இப்போ வந்துருவா, வரைஞ்சு தருவா.''
அம்மா, அக்கா, அண்ணன் எல்லாரும் ஏதோ ஒரு வேலையை சொல்லி இதே போல கைவிட்டனர்.
கோபமாய் ஒரு மூலையில் போய் உட்கார்ந்தான். வேறே வழியில்லை, நாமே முயற்சித்துப் பார்க்க வேண்டியது தான்.

ரண்டு மணி நேரம் பொறுத்து...
பின்னால் வந்து நின்ற அப்பா, ''அட, மான், யானை, கங்காரூ எல்லாம் தத்ரூபமா இருக்கே, நீயேவா வரைஞ்சே? எப்படிடா?''
''அது டிஸ்கவரி சேனல்ல பார்த்ததை ஞாபகம் வெச்சி வரைஞ்சேன்,'' என்றான் பெருமை வழிய.
அதற்குள் அம்மா, அண்ணன், அக்கா எல்லாரும் வந்து பாராட்ட, ''பார்த்தியா, நீ கேட்டதும் நாங்க யாராவது வரைஞ்சு தந்திருந்தா, உனக்குள்ளே இத்தனை திறமை இருக்கிறது உனக்குத் தெரிய வந்திருக்குமா?'' என்று கை தட்டினார் அப்பா.
அவர் சொல்லிக் கொடுத்த மாதிரியே சொல்லி நழுவிக்கொண்ட அம்மா அண்ணன் அக்காவும்!

(குமுதம் 09-08-2006 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

11 comments:

R.Gopi said...

குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தை அழகாக சொன்ன கதை...

வாழ்த்துகள் ஜனா சார்...

angel said...

நல்ல கதை .கடைசி வரியை வாசிக்கும் போது அவன் திறமையை சற்று மிகை படுத்தியது போல் ஒர் உணர்வு.

பத்மா said...

நல்லா இருக்குங்க .இப்படித்தான் குழந்தைகளின் திறமையை வெளிக்கொணரனும்

Rekha raghavan said...

ஒரு பக்கத்தில் தன்னம்பிக்கையை ஊட்டும் அருமையான கதை.


ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

Bhagat said...

நழுவிக்கொண்ட அம்மா அண்ணன் அக்காவும்! - Does the last line give out the clue on what the author really thinks about the way things happened ?

Chitra said...

குழந்தையின் திறமையை அடையாளம் கண்டு கொண்டு, வளர்க்கச் சொல்லும் நல்ல கதை. பாராட்டுக்கள்!

Ananya Mahadevan said...

குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர்வதறகு நல்ல யுக்தி! வாழ்த்துக்கள் ஜனா சார்.

settaikkaran said...

சுருக்கமாய் ஒரு நறுக்கென்ற நல்ல சிறுகதை! கருவும் சிறப்பு! வாழ்த்துகள்!

பா.ராஜாராம் said...

அருமை ஜனா!

வாழ்த்துக்கள்.

ரிஷபன் said...

தன்னம்பிக்கை டானிக்.. பெரியவர்களுக்கும் கூட

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட..இப்படி ஒரு ஐடியா இருக்கா? இது தெரியாம
நான அசட்டுத் தனமா பையனுக்கு படம் வரைந்து கொடுத்து டீச்சர் கிட்ட திட்டு வாங்கி கொடுத்தது தான் மிச்சம்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!