விடலைப் பருவத்துடன்
விடை பெற்றுக் கொண்டுவிட்டது
வாழ்க்கையிலிருந்து வசந்தம்.
எதிர்பார்ப்பு அதிகமிருந்ததாலோ என்னவோ
ஏமாற்றம் சகஜப்பட்டுப் போய்விட்டது.
இங்கிதமும் சங்கோஜமும் உடனிருந்ததால்
இழந்த வாய்ப்புகள் எத்தனை எத்தனை!
என்ன நினைப்பார்கள் என்ற நினைப்பு
எப்பவுமே அடங்கிப் போக வைத்துவிட்டது.
எல்லாம் ஓய்ந்தபின்
இன்று நினைத்துப் பார்க்கையில்
மிச்சம் இல்லை வாழ்க்கையில்...
8 comments:
//எதிர்பார்ப்பு அதிகமிருந்ததாலோ என்னவோ
ஏமாற்றம் சகஜப்பட்டுப் போய்விட்டது.//
நிதர்சனமான உண்மை. அழகான அளவான கவிதை.
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)
மாற்றி யோசித்த மறு[!]ப்பு கவிதை
விடலை பருவத்தோடு எப்படி முடியும் வசந்தம் ?
மொட்டவிழ, துடிக்கின்ற
பருவமல்லவா விடலை பருவம்?
வாலிபம் அல்லவா வசந்தத்தின் தொடக்கம்?
இங்கிதமும் சங்கோஜமும் உடனிருந்ததால்
“கிடைத்த” வாய்ப்புகள் எத்தனை எத்தனை?
இருக்கிறதல்லவா ஜனா?
“எல்லாம் ஓய்ந்தபின்” -
கவிஞனுக்கு உண்டோ, ஓய்வும், பின்னும்?
இன்னமும் வாழ்கையில்
எத்தனை எத்தனை வாய்ப்புகள்?
இருக்கிறதல்லவா ஜனா?
- பகவத் குமார்
என்ன நினைப்பார்கள் என்ற நினைப்பு தான் பல சங்கடங்களுக்கு காரணம் .வயதிற்கும் வசந்ததிற்க்கும் தொடர்பில்லை .தொடருங்கள்
இன்று நினைத்துப் பார்க்கையில்
மிச்சம் இல்லை வாழ்க்கையில்...
ஏன் இல்லை..
ஜனா ஸார்.. அருமையான நட்பு வட்டம் உங்களைச் சுற்றி நிற்கிறோமே..
//எல்லாம் ஓய்ந்தபின்
இன்று நினைத்துப் பார்க்கையில்
மிச்சம் இல்லை வாழ்க்கையில்...//
நிதர்சனமான எழுத்து... அதுவும் எல்லாம் ஓய்ந்தபின் இன்று நினைத்து பார்க்கையில் மிச்சம் ஏதுமில்லை வாழ்க்கையில் என்பது இந்த வார்த்தையை தான் நினைவு படுத்துகிறது...
“ஆடி அடங்கும் வாழ்க்கையடா”
#நன்றி, ராகவன்!
#நன்றி குமார், ஆஹா, கேள்வி தோன்றிவிட்டது. வளர ஆரம்பித்து விட்டீர்கள். மகிழ்ச்சி! பதில்கள்? விரைவில் அடைவீர்கள் குமார்..
#நன்றி, பத்மா.
#நன்றி, ரிஷபன்!
நன்றாக இருக்கிறது. படம் ஜோர்!!
ரிஷபன் சொன்னதை வழி மொழிகிறேன்
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!