பல நேரங்களில் காலியாகப்
பயணிக்கும் பின்னிருக்கைகள்
வேலைக்காரி பெருக்கித் தள்ளும்
விரித்த முழுத் தாள்கள்
அப்புறம் படிக்கவென்று
ஆர்க்கும் தராமல்
அலமாரியில் நகம் கடிக்கும் புத்தகங்கள்
ஏறும் விலை என்று
ஏதும் பயிரிடாமல்
தோதாக விட்டு வைத்த வயல்கள்
கண்ணில் விபத்து பட்டதும்
கடிதில் மூடிக்கொண்ட கார்கள்
பதில் எழுத நினைத்து மறந்த கடிதங்கள்
சட்டென்று மனம் தொட்டதும்
முடிந்து வைத்த சங்கல்பங்கள்
காக்கைக்கு வைக்க மறந்த சாதங்கள்
கச்சேரிக்குப் போகத் தயங்கிய கால்கள்
பசங்களுக்கு சொல்லத் தவறிய கதைகள்
நிசங்களைத் தரிசிக்க அஞ்சிய கண்கள்
நடுவதற்கு விட்டுப் போன செடிகள்
சொல்லாத வாழ்த்துக்கள்
அள்ளாத பன்னீர்ப் பூக்கள்
கிள்ளாத மழலைக் கன்னங்கள்...
நினையாமலிருக்க முடியவில்லை
நனையாமலிருக்கும் நம் குடைகளை...
12 comments:
கவிதையில் ஆழமும், அழகும் அதிகம்!
நல்லதொரு நினைவு! மழையில் நனையாத குடை, பன்னீர் புஷ்பங்கள் எல்லாமே நல்ல நினைவுகள். பகிர்வுக்கு நன்றி.
பசங்களுக்கு சொல்லத் தவறிய கதைகள்
நிசங்களைத் தரிசிக்க அஞ்சிய கண்கள்
.......கவனக்குறைவினாலோ, இல்லை வேண்டும் என்றோ கண்ணை மூடிக் கொண்டு கடந்து சென்ற நேரங்களை - வாழ்க்கை படிகளை கவிதையில் காண முடிகிறது.... அற்புதம்!
ஆஹா ஆஹா. ப்ரமாதம்
சொல்லாத காதல்
தராத முத்தம்
நனையாத மழை
கேட்காத இசை
மறந்த கனவு ..இவையும் கூட
ஜனா,
ரொம்ப நல்லாருக்கு.
கவிதைகள் அழகாய் பூத்த மலர்களாய் சிரிக்கின்றன! வாழ்த்துகள்!!
ஆஹா....
அற்புதமாய் கண்களில் விரிந்த கவிதை...
விழி மூட மறந்தேன்....
Excellent sier. Liked it very much.
அலமாரியில் நகம் கடிக்கும் புத்தகங்கள்
கவிதை முழுமையுமே அற்புத வரிகள்..
மிகவும் ரசித்தேன்..
நன்றி சேட்டைக்காரன்!
நன்றி வெங்கட் நாகராஜ்!
நன்றி சித்ரா
நன்றி வானம்பாடிகள்!
நன்றி பத்மா!
நன்றி பா.ரா.!
நன்றி எம். அப்துல் காதர்!
நன்றி ஆர். கோபி!
நன்றி மோகன் குமார்!
நன்றி ரிஷபன்!
//கண்ணில் விபத்து பட்டதும்
கடிதில் மூடிக்கொண்ட கார்கள்//
கவிதை முழுவதும் யதார்த்த வரிகள்.
ரேகா ராகவன்.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!