முக்கால்வாசி தேறி விட்டது. இன்னும் ஒரு பத்தாயிரம் இருந்தால் மகன் வேலையில் சேரத் தேவையான பணம் தேறிவிடும். மண்டையை உடைத்துக் கொண்டிருந்தபோது...
''ஏங்க, தாம்பரத்தில் உங்க நீலகண்ட மாமா இருக்காரில்லையா? அவரைப் பார்த்தால் என்ன?'' அருமையான யோசனைக்கு மறு பெயர் என் மனைவி.
மாமா மனைவியை இழந்தவர். பிள்ளைகள் இல்லை. ரிடையரான பின் தனியே ஒரு வீட்டில் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்.
''எப்படி இருக்கிறீங்க மாமா?'' என்று அவரைப் பற்றி விசாரித்தபடி வீட்டில் நுழைந்தேன். கொஞ்சம் பேசினேன்.
''நீ வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. எத்தனையோ சொந்தக்காரங்க. யாருமே எட்டிப் பார்க்கிறதில்லை. நீ ஒருத்தன் தான் தேடிவந்து விசாரிக்கிறே. ரொம்ப நன்றிப்பா.'' கைகளைப் பற்றிக் கொண்டார்.
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்த விஷயத்தைக் கேட்காமலேயே திரும்பி விட்டேன். எத்தனை நம்பிக்கையோடு என் வருகையில் மகிழ்கிறார்? அந்த மகிழ்ச்சி அப்படியே இருக்கட்டுமே!
(12-11-2008 குமுதம் இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)
11 comments:
ஒரு நெகிழ்ச்சியான கதையை ஒரு பக்கத்திலும் தர முடியும் என்பதை நிரூபிக்கும் கதை.
ரேகா ராகவன்
( சிகாகோவிலிருந்து )
உணர்வுகளின் வெளிப்பாடு
நன்றாக வந்திருக்கிறது.
மனதைத் தொட்டது. மனித உணர்வுகளுக்கு மதிப்பு தரும் கதை.
ஒரு பக்க கதை எழுதுவதன் நுணுக்கங்களை உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முடிகிறது.நன்றி.
ஒரு பக்க கதை எழுதுவதன் நுணுக்கங்களை உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முடிகிறது.நன்றி.
வழக்கம் போல் அருமை..
சொல்ல முடியாத நெருடல் என் இருதயத்தில் அருமை....
செந்தில்குமார்.அ.வெ
அரபு தேசத்தில் இருந்து..........
கலக்கல் என் மனதில் லேசான கணம்...
நம்பிக்கையில் கிடைக்கின்ற சந்தோஷம்....... நெகிழ்ச்சியான கதை. மனதை தொட்டது.
நெகிழ்வான கதை. ஒன்றும் கேட்காமல் திரும்பியது கனத்தை கூட்டியது
மிகவும் நெகிழ்வான மனதை தொடும் சிறுகதை.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!