Saturday, March 6, 2010

தனிமை


''என்னங்க, எழுபது வயசில ஊரில் தனியா கஷ்டப்படறேன்னு சொல்ற அப்பாவை நம்மோட அழைச்சிட்டும் வர மாட்டேங்கறீங்க, போய்ப் பார்க்கவும் நேரமில்லேங்கறீங்க... இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை தானே? நான் காலையிலேயே ஊருக்குப் போய் அப்பாவோடு ஒரு நாள் பூரா வீட்டிலிருந்து அவரைக் கவனிச்சுட்டு சாயங்காலம் வந்திடறேன்.''
''அட என்ன சுமதி, முடிவே பண்ணிட்டியா?''
''ஆமா!'' புறப்பட்டாள். ''சாப்பாடெல்லாம் எடுத்து மேஜை மேலே வெச்சிருக்கேன்.''
னந்த் டி.வி. பார்த்தான். போரடித்தது. குளிக்க நினைத்தான். சோர்வாக இருந்தது. சாப்பிட்டான். தனியே சாப்பாடு இறங்கவில்லை. தூங்க முயன்றான். வரவில்லை.

ரவில்...
''நாளைக்கே போய் அப்பாவை அழைச்சிட்டு வந்திடப் போறேன்,'' என்று அறிவித்தான் ஆனந்த். ''வயசோட கைகால் நல்ல வேலை செய்யற எனக்கே ஒரே ஒரு நாளைத் தனியா கழிக்கிறதுக்கு இத்தனை கஷ்டமா இருக்கே. எழுபது வயசுக்காரர் தனியா அந்த சின்ன கிராமத்தில எத்தனை கஷ்டப்படுவார்னு இப்பதான் புரிஞ்சது.''
மனசுக்குள் சிரித்துக் கொண்டாள் சுமதி.
(குமுதம் 09-01-2008 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

ராடானின் கிரியேடிவ் கார்னரில் SMART STORIES பகுதியில் இந்தக் கதை தேர்வு.

12 comments:

ரிஷபன் said...

அருமை.. தனிமை சிலசமயம் வேண்டும் போல் இருக்கும்.. ஆனால் நிஜமாய் தனிமை வெறுப்பேற்றி விடும்..

பத்மா said...

அனுபவம் கற்பிக்கும்

சைவகொத்துப்பரோட்டா said...

தனிமை - இனிமை, மிக நயமாக எழுதி இருக்கிறீர்கள்.

Rekha raghavan said...

ஒரு பக்கக் கதைக்கே உரித்தான இலக்கணங்களுடன் அருமையான கதையை வாசித்த திருப்தி.

ரேகா ராகவன்.

Bagavath Kumar.A.Rtn. said...

தனிமை வெறுமைதான்.
அதிலும் பிள்ளைகள் இருந்தும் தனிமை என்றால்
கொடுமைதான். ஜனா தனக்கே உரிய விதத்தில்
மனம் தொடுகிறார் -ப.குமார்

R.Gopi said...

அனுபவம் கற்பிக்கும் பாடம் தான்... உண்மையான பாடம்...

மிக அழகான நடையில் எழுதப்பட்ட ஒரு நல்ல கதை...

வாழ்த்துக்கள் சார்...

CS. Mohan Kumar said...

நல்ல "treatment"

கே. பி. ஜனா... said...

ரிஷபன், padma, சைவ கொ.ப., ராகவன், பகவத், கோபி, மோகன் குமார்:
நன்றி! நன்றி!

DREAMER said...

யதார்த்தமாக உள்ளது... நல்லாயிருக்கு...

-
DREAMER

karthik said...

enakku en appa ninaivu varuthu

கிருஷ்ணா said...

கே பி ஜனா கதைகள் எப்பவும் சூப்பர். இப்பவும் தான்

இடைவெளிகள் said...

தனிமை ஒரு மனிதனை சிந்திக்க வைத்திருக்கிறது என்பதை மிக அழகாகச் சொன்ன கதை.நன்றி

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!