Saturday, May 2, 2026

முக்கியமான வேற்றுமை...

சினிமா.. மினிமா...

35mm, சினிமாஸ்கோப் இரண்டுக்கும் உள்ள முக்கியமான அந்த ஒற்றுமை! ரெகுலர் படங்களைப்போலவே சி.ஸ்கோப்பும் 35mm-இல் எடுக்கப்படுவதுதான். என்ன, எடுக்கும்போதே பிரத்தியேக லென்ஸினால் காட்சியை (ஆளையும்) ஒல்லியாக்கி எடுத்துவிடுவார்கள்,பிறகு ப்ரஜெக்டரில் வேறு லென்ஸினால் விரிவாக்கி காட்டப்படுகிறது.
70mmபடங்கள் அப்படி சுருக்காமல் நிஜமாகவே wide film -இல் படமாக்கப்படுகிறது....
முதல் 70mmபடம் (with 6 sterophonic sound) சென்னையில் ஆனந்த் தியேட்டரில் ரிலீஸானபோது பார்த்தது இன்னும் நினைவில். படம் SOUTH PACIFIC என்ற musical.
படத்துக்கு முன் 70mm-இன் விசேஷம் பற்றி தெரிந்துகொள்ள ஒரு சிறுபடம் காட்டுவார்கள். வளைந்து அகன்ற மாபெரும் திரையில் கார் விரைகிறது. டிரைவர் சீட்டில் காமிரா. கூடவே நாமும் பயணிக்கிற உணர்வு. முன்னாலுள்ள சாலையில் வேகமாகப் போகிறோம். வர வர வேகம் கூடுகிறது… ஒரு ஜங்ஷன் எதிர்ப்படும்போது இடது பக்கமிருந்து ஒரு காரும், வலதிலிருந்து ஒன்றும் வேகமாக வர அந்தக் கடைசி ஷாட்டில் ‘நாம்’ வேகமாகச் சென்று அவற்றுடன் 'மோதப்போகும்' அந்தக் கணத்தில் படம் முடிந்து லைட்ஸ் ஆன் ஆகும். ஆடியன்ஸ் அதிர்ச்சியும் வியப்பும் சலசலப்பும் அடங்க அப்புறம் மெய்ன் பிக்சர் தொடங்கும்.

தொடர்ந்து Sound of Music, Cleopatra (Safire தியேட்டர்) என வரிசையாக 70mm படங்கள்…

><><

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!