ஆனா இப்பல்லாம் ஷூட்டிங் நடக்கிறப்ப எந்த சத்தம் எழுந்தாலும் கவலை இல்லை. க்யூட் சப்தம்னாலும் ம்யூட் தான். பேச்செல்லாம் டப்பிங்கில் பார்த்துக் கொள்ளலாம். நடிகர்களுக்கு வசதி. நாடகம் மாதிரி ப்ராம்ப்ட் கூட பண்ணலாம்.
ஆனால் முன்புக்கும் முன்பொரு காலத்தில், அதாவது மௌனப் படங்கள் வந்த காலத்தில் நிலைமை வேறு. எந்த சத்தம் போட்டாலும் ஃபிலிமில் விழாது. ஏன்னா அந்த வசதி இல்லை. அதனால் இருந்த கஷ்டம் அதிகம். ஃபிலிமில் டயலாக் ஒலிப்பதிவு ஆகாது. பத்துப் பதினைந்து ஷாட்டுகளுக்கு ஒரு முறை வசனத்தில் எஸென்ஷியல் ஒரு வரியை கார்டு போடுவார்கள். மிச்சம் எல்லா வசனத்தையும் நடிப்பில் காட்டவேண்டும். அழுவதையும் சிரிப்பதையும் தவிர அத்தனை எமோஷனும் சவால்தான்.
அந்தவிதமான மௌனப் போர்ட்ரேயலில் ஜெயித்து சக்கைப்போடு போட்டவர்களில் மகத்தானவர் சார்லி சாப்ளின். (எந்த அளவுக்கு என்றால் மௌனித்த படங்கள் பேச ஆரம்பித்தபோது அதில் நடிக்க விருப்பமே வரவில்லையாம்.) அடுத்தபடியாக அந்த சைலன்ட் எராவில் சக்கை போடு போட்ட ஹீரோ..
Rudolph Valentino…(1895 - 1926) இன்று பிறந்த நாள்!
இத்தாலியில் இருந்து ஹாலிவுட்டுக்கு இடம் பெயர்ந்தவர். ஆரம்பத்தில் காசின்றி ரோடுகளில் நடமாடியவர் அதன்பின் ஓட்டல்களில் நடனமாடினார். அப்புறம் சின்ன சின்ன வேடங்கள்.
‘The Four Horsemen of the Apocalypse’ படத்துக்கு திரைக்கதை எழுதிய பெண் (June Mathis) இவரை சிலாகித்து சிபாரிசித்து ஹீரோ வேடம் வாங்கிக்கொடுத்து இவர் வாழ்க்கைக் கதையை எழுதினார்.
அதிவிரைவில் மாஸ் ஹீரோ ஆகிவிட்டார். Tango டான்ஸை இவர்தான் அறிமுகப்படுத்தினார் ஹாலிவுட்டுக்கு என்பார்கள். பத்து லட்சம் டாலர் மொத்த வசூல் வந்த முதல் படங்களில் இவருடையதும்….
பரபரப்பான படோபடோப வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு புகழின் உச்சத்தில் தன் முப்பதுகளின் துவக்கத்தில் மறைந்தார். அதிர்ச்சியுடன் அடக்கத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலும் பெண் ரசிகைகள்.
இவரது வாழ்க்கை மூன்று முறை படமாக, அதில் ஒன்றில் நடித்தவர் பிரபல Franco Nero.

No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!