Tuesday, May 9, 2023

பல்லவி பாடவைக்கும் முகம்...


அன்புள்ள தன் அப்பாவையும் அழகிய தன் கிராமத்தையும் அடியோடு நேசிக்கிறாள் பானு. அவர்களை விட்டு அவள் அந்தண்டை இந்தண்டை நகருவதாயில்லை. ஆனால் அக்காவைப் பெண் பார்க்க யூ.எஸ்சிலிருந்து வந்தவனின் அழகிய தம்பியோ அவள் உள்ளத்தை அஸால்டாக அள்ளிக் கொண்டு விடுகிறான். சின்னச் சின்ன அவள் குறும்புகள் அவனையும், பெரிய பெரிய அவன் திறமைகள் அவளையும் கவர...

விழுந்து விடக் கூடாது, விழுந்து விடக் கூடாது என்ற அவள் எச்சரிக்கையை உள்ளம் காதில் போட்டுக் கொண்டால்தானே? 'தொபீர்'!
கட்டினா விட்டுப் போகணுமே எல்லாத்தையும்? ஒரு சின்னக் காரணம்! ஒண்ணே ஒண்ணு கிடைச்சாப் போதும் இவன் லாயக்கில்லேன்னு ஒதுக்கிரலாம்னு அலயறா. அலை பாயறா. கிடைச்சாத்தானே? தவிக்கிறாள். .. நம்மையும் தவிக்க விடுகிறாள்.
பானுவாக வந்து பாடாய்ப் படுத்துகிறவர்... பல்லவி, சாய் பல்லவி.
படம்: 'Fidaa' (தெலுங்கு)
அழகான அடுத்த வீட்டு பெண் லுக். சிரிப்பில் யார் மனமும் திக் திக்!
அவன் கேட்டான்னு அம்மா சொல்ல, மழையில நனைஞ்சுட்டே போய் அடுத்த வீட்டிலேர்ந்து ஊறுகாய் வாங்கிட்டு வந்தால், அதுக்குள்ளே சாப்பாட்டை விட்டு எந்திரிச்சிட்டானேன்னு அழகாக முழிப்பதும், அப்புறமா ‘நீதானே எனக்கு கிராமத்தை சுத்திக் காட்டணும்?’னு கேட்டவனை, பையா உனக்கு படா பேட் டைம்னு, ‘அதுக்கென்ன, கோவிலுக்கு போகலாமே!’னு சொல்வதும்..
பாவம், அவ சொன்ன மாதிரி அதுக்காக அதிகாலை 3 மணிக்கே எழுந்து அவன் பச்சத் தண்ணியில தலை குளிச்சிட்டு பஞ்சகச்ச வேஷ்டியை சுத்திட்டு, வீட்டை சுத்தி சுத்தி வர, அவள் சுகமா தூங்கிவிட்டு, மறுநாள் அவன் கிராஸ் பண்ண, ‘நீ மட்டும் என்னை ஊறுகாய்க்கு அலைய விடலையா?’ன்னு மடக்கறதும்.. ‘அடப்பாவி! அத்தைகிட்ட சொல்லவா?’ என்றதும் அவனின் அதிகாலைக் கிணற்றடிக் குளியல் போட்டோக்களை நீட்டுவதும்.. "நான் பானுமதியாக்கும்!"னு ஓடுவதும்... அவர் முகத்தின் ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் கொப்புளிக்கும் குறும்பு!
பல்லவி பாடவைக்கும் முகம்! எந்த அளவு உற்சாகத்தை கொட்டுகிறதோ அந்த அளவுக்கு தோல்வியுற்ற காதலின் மன அழுத்தத்தையும் காட்டுகிறது அதே முகம்! ஏறுமுகம்தான் இனி நடிப்பில்!
Filmfare, SIIMA சிறந்த நடிகை அவார்ட்...
சாய் பல்லவி... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!