Sunday, August 14, 2016

நல்லதா நாலு வார்த்தை... 70


'இனிமேல் எப்படி ஆகவிருக்கிறாயோ, 
 இப்போதே அப்படி இருக்கத் தொடங்கு.'
- William James
('Begin to be now what you will be hereafter.')
<>

'யார் நான், 
ஏன் இங்கு இருக்கிறேன் 
என்பதறியாது 
சாத்தியமில்லை வாழ்வது.'
- Leo Tolstoy
('Without knowing what I am and
why I am here, life is impossible.')
<>

'அநேக நேரம் சிரிக்கிறவன்
அறிகிறான் சிறப்பாக.'
- John Cleese
('He who laughs most, learns best.')
<>

’மனிதர்கள் மாறுகிறார்கள்;
மறந்து விடுகிறார்கள் 
ஒருவருக்கொருவர் சொல்ல.’
- Lillian Hellman
(’People change and forget to tell each other.’)

<>

’நேற்று விழுந்திருந்தால்
இன்று எழுந்து நில்.'
- H. G. Wells
('If you fell down yesterday, stand up today.')
<>

'ஆனைகள் சண்டயிடுகையில்
அவதிக்குள்ளாவது புற்கள்.'
- African proverb
('When elephants fight it's the grass that suffers.')
<>

’நம்மால் என்ன முடியுமென்பதைப்
பாராத வரையில்
நாம் யாரென்றறியோம் நாம்.’
- Martha Grimes
(’We don't know who we are until we see what we can do.’)

<>

'நன்றாய் உன்னை அறிந்தபின்னும்
நன்கு உன்னை நேசிப்பவனே 
நண்பன்.'
- Elbert Hubbard
('The friend is the man who knows
all about you, and still likes you.')

><><><><

4 comments:

ரிஷபன் said...

அருமையான தொகுப்பு.. நினைவில் சேமிக்க..

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

வெறும் பொன்மொழிகள் ஒருபக்கம் தேவைதான். அவற்றை உள்ளடக்கிய சிறிய குறுங்கதைகள் இன்னும் பலனளிக்கும். அப்படி ஒரு முயற்சி செய்யுங்களேன். இன்னும் கூடுதலாகக் கவனிக்கப் படுமல்லவா? வாழ்த்துகள்.

Rekha raghavan said...

ஆஹா அருமையான மொழிபெயர்ப்பு. நல்ல கருத்துக்கள்.

Yarlpavanan said...

அருமையான எண்ணங்கள்

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!