Friday, April 10, 2015

எனக்குள் இருந்தவன்...

அன்புடன் ஒரு நிமிடம் - 78
பார்த்துக் கொண்டேயிருந்தாள் ஜனனி. அவளால் ஜீரணிக்க முடியவில்லை. என்ன நடக்கிறது இங்கே? தெரிந்துதான் செய்கிறாரா இவர்?
வாசு, தான் கடைசியாக வேலை செய்த கம்பெனியின் உரிமையாளரை போனில் அழைத்தார்.  புதிதாகத் தான் ஆரம்பிக்கவிருக்கிற கம்பெனியின் திறப்பு விழாவுக்கு வரும்படி கேட்டுக் கொண்டார்.
“எட்டாம் தேதியா? அன்னிக்கு வேறே ஒரு வேலை இருக்கே.”
“அப்படியா, சரி சார். பின்னாடி ஒரு நாள் சௌகரியப்படும்போது வரணும்.”
”கண்டிப்பா வர்றேன்.”
போனை வைத்தவர் இவளிடம் பெட்டியில் துணிமணிகளை எடுத்துவைக்க சொன்னார்.
“கோயம்பத்தூர் புறப்படறேன். அங்கேதானே இருக்கார் என் பழைய பாஸ்?  திறப்பு விழாவுக்கு அவர் வந்தாகணும், அதனால போய் வற்புறுத்தி அழைக்கணும்….என்ன, பார்வை ஒரு மாதிரி போகுது?”
”உங்க செய்கைகள் தான் ஒரு மாதிரி போகுது. ஏங்க, உங்க பழைய முதலாளி ஷண்முகம் உங்களைப் படுத்தின பாட்டை ஒரு நாள் விடாம சொல்லி சொல்லி மாய்வீங்க. ராத்திரி பன்னிரெண்டு மணி வரை வேலை வாங்கினது, திட்டோ திட்டுன்னு திட்டறது,  புதுசு புதுசா வேலைகளைத் தலையில் திணிக்கிறது, சரியா சம்பளம் தராதது, சமயத்தில சாப்பிடக்கூட விடாதது அப்படீன்னு எத்தனை இன்னல்களை அடுக்குவீங்க? அதுக்கு நேர் மாறா இப்ப இங்கே பாஸா இருக்கிற மாதவன் உங்களை ரொம்ப  நல்ல நடத்தறார், கஷ்டப்படுத்தறதில்லை, ரிலாக்ஸ்டா வேலை பார்க்கிறீங்க! உண்டா இல்லையா?”
”அதிலென்ன சந்தேகம்?” 
”அப்புறம் ஏன் இப்படி? உள்ளூர்லேயே இருந்தும் இவரை  நேரில் போய் அழைக்காமல் போன் பண்ணி சொல்றீங்க, வரமுடியலேன்னதும் ஓகேன்னு விட்டுடறீங்க. ஆனா கோயம்பத்தூர்ல இருக்கிற அவரைப் போய் நேரில் பார்த்து கண்டிப்பா வரவழைக்கணும்னு கிளம்பறீங்க. அவர் வந்தா என்ன, வராட்டி என்ன? சொல்லப் போனா நாளைக்கு அவர் பார்த்து மலைக்கும்படி நீங்க வளர்ந்து காட்டணும். அதானே எல்லாரும் செய்வது?”
வாசு புன்னகைத்தார்.
”நீ பார்ப்பது தவறான கோணத்தில்! அவர் என்னைக் கஷ்டப் படுத்தியது, நான் உடல் நொந்தது, முணுமுணுத்தது, மனசுக்குள் திட்டியது எல்லாம் வாஸ்தவம்தான். ஆனால் என் முழுத் திறமையும் வெளிப்பட்டது அவரிடம் வேலைபார்க்கும்போதுதான்.  He demanded more than I could think of myself as capable of. என்னால் எத்தனை விஷயங்கள், எந்த அளவுக்கு செயலாற்ற முடியும் என்று எனக்கே காட்டியது அவர்தான். இன்றைக்கு ஒரு தனி கம்பெனி ஆரம்பிக்கிற துணிச்சல் ஏற்பட்டது அங்கே உருவாகி வளர்ந்த தன்னம்பிக்கையால்தான். அவர் இல்லாமல் இந்தத் திறப்பு விழாவை எப்படி … நினைத்துப் பார்க்கவே முடியலை என்னால்!”

வியப்புடன் நோக்கினாள் ஜனனி.
(’அமுதம்’ ஜூன் 2014 இதழில்  வெளியானது)
><><><

9 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

நன்றாக உள்ளது... அமுதம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

cheena (சீனா) said...

அன்பின் ஜனா

அருமையான பதிவு. அலசி ஆராய்ந்து பணிகளைச் செய்ததினால் [ He demanded more than I could think of myself as capable of ] என்னால் எத்தனை விஷயங்கள், எந்த அளவுக்கு செயலாற்ற முடியும் என்று எனக்கே காட்டியது அவர்தான். இன்றைக்கு ஒரு தனி கம்பெனி ஆரம்பிக்கிற துணிச்சல் ஏற்பட்டது அங்கே உருவாகி வளர்ந்த தன்னம்பிக்கையால்தான். அவர் இல்லாமல் இந்தத் திறப்பு விழாவை எப்படி … நினைத்துப் பார்க்கவே முடியலை என்னால்!”
சுய முன்னேற்றக் கட்டுரை அருமையிலும் அருமை. அமுதம் இதழில் வெளிவந்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

He demanded more than I could think of myself as capable of. என்னால் எத்தனை விஷயங்கள், எந்த அளவுக்கு செயலாற்ற முடியும் என்று எனக்கே காட்டியது அவர்தான். இன்றைக்கு ஒரு தனி கம்பெனி ஆரம்பிக்கிற துணிச்சல் ஏற்பட்டது அங்கே உருவாகி வளர்ந்த தன்னம்பிக்கையால்தான். அவர் இல்லாமல் இந்தத் திறப்பு விழாவை எப்படி … நினைத்துப் பார்க்கவே முடியலை என்னால்!”

cheena (சீனா) said...




He demanded more than I could think of myself as capable of. என்னால் எத்தனை விஷயங்கள், எந்த அளவுக்கு செயலாற்ற முடியும் என்று எனக்கே காட்டியது :

அவர்தான். இன்றைக்கு ஒரு தனி கம்பெனி ஆரம்பிக்கிற துணிச்சல் ஏற்பட்டது அங்கே உருவாகி வளர்ந்த தன்னம்பிக்கையால்தான். அவர் இல்லாமல் இந்தத் திறப்பு விழாவை எப்படி … நினைத்துப் பார்க்கவே முடியலை என்னால்!” :

பாராட்டுகள்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

கரந்தை ஜெயக்குமார் said...

திறமையை வெளிக்கொணர ஒரு திறமை வேண்டுமே
அருமை
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வளர்த்து விட்ட ஏணியை மறக்கவே கூடாது... (முடியாது)

வெங்கட் நாகராஜ் said...

அவரது திறமையை வெளிக் கொணர்ந்தவராயிற்றே....

நல்ல பகிர்வு.

Yarlpavanan said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

ராமலக்ஷ்மி said...

அருமை. மறக்கக் கூடாதவரை நன்றியுடன் நினைத்திருப்பதும் பாராட்டுக்குரியது.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் !

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!