Monday, January 26, 2015

தனக்குத்தானே....


தனக்குத்தானே...

திட்டாய் அழுக்கு படிந்த சட்டை
கீறலாய் வடுவொன்று முகத்தில்
அறுபதோ எழுபதோ சொல்லமுடியாத தளர்வுடன்
தனக்குத்தானே பேசிக்கொண்டு 
தலை கவிழ்ந்தபடி நடக்கிறவரை
எளிதில் சேர்த்துவிட முடியும் 
ஏதோ மெண்டல் பட்டியலில். 
பின்னால் கேட்டுக்கொண்டு 
நடக்க நேர்ந்ததில் தெரிந்தது
தன்னாலே பேசவில்லை அவர்.
கொடுத்துக் கேட்கிற இரு செவிகள்
தன் துக்கங்களுக்குக் கிடைக்காத துக்கத்தை 
வேறெப்படிப் போக்குவார் அவர்...

அவளும்...

பாத்திரத்தை எட்டிப்பார்த்தால்
கொஞ்சம்போல சோறு மிச்சமிருந்தது
பயல் இலையில மிச்சம் வெச்ச
பச்சடி ஒரு மொளறு
எடுத்துப்போட்டு சாப்ட்டதில
ஏழெட்டு மணி மாடாக வேலை செஞ்சதுக்கு
அமுதமாக...
அரை வயித்தை திருப்தியா நெரப்பி
அம்மா வந்து பாத்தபோது
அப்பாவுக்கோ கொழம்பு நல்லா வரல,
பயலுக்கோ தொவரம் உப்பு ஜாஸ்தி.

><><><

8 comments:

ரிஷபன் said...

கொடுத்துக் கேட்கிற இரு செவிகள்
தன் துக்கங்களுக்குக் கிடைக்காத துக்கத்தை
வேறெப்படிப் போக்குவார் அவர்...// வலிக்கும் வரிகள்

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் "தனக்குத்தானே...." ஒருநாள்...

வெங்கட் நாகராஜ் said...

முதல்.... நிறைய முதியவர்களின் இன்றைய நிலை இது தான்... வேதனை தரும் விஷயம்.

இரண்டாம் கவிதையும் அருமை.

மனோ சாமிநாதன் said...

இரு கவிதைகளும் அழகு!

மனோ சாமிநாதன் said...

ப‌ழைய தேவி தொகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்த போது ஒரு விஷயம் என் கண்ணில் பட்டது. நீங்கள் கே.பி.ஜனார்த்தனன்
[ உங்களின் முழுப்பெயர் அது தான் என்று நினைக்கிறேன்] என்ற பெயரில் எழுதியிருக்கும் 'காலை ராகம் ' என்ற சிறு கதைக்கு நான் தான் ஓவியம் வரைந்திருக்கிறேன்! எத்தனை ஆச்சரியமான விஷயம் இது!

கே. பி. ஜனா... said...

மனோ சாமிநாதன் அவர்களுக்கு - அப்படியா... எத்தனை சந்தோஷமான ஆச்சரியம்! இப்போது அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி! உங்கள் வலைப்பூவில் நீங்கள் வெளியிட்டுள்ள ஓவியங்களைப் பார்த்தேன். எல்லாமே சிறப்பாக உள்ளன. நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆக்கம் அருமை.

தேவியில் வெளியான தங்கள் சிறுகதைக்கு திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள் ஓவியம் வரைந்துள்ளது கேட்க மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது.

இருவருக்கும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான ஆக்கம்.

தேவியில் வெளியானதோர் தங்களின் கதைக்கு திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள் ஓவியம் வரைந்துள்ளதாகச் சொல்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது.

இருவருக்கும் என் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!