Saturday, January 17, 2015

அவள் - 14

 


85.
அற்புதமானவர்கள்
மிக அற்புதமானவர்கள்
அவள். 
><><

86
அவள் எதற்கோ
சிரிக்கிறாள்
நான் எனக்குள்
தொலைந்து போகிறேன்.
><><

87
பக்கத்தில் இருந்தவளைக்
காணோம்
’இங்கே இருக்கிறேன்,’
குரல் வருகிறது
கனவுக்குள்ளிருந்து.
><><

88
அமைதியாய் நீ
அமர்ந்திருக்க அமர்ந்திருக்க
அமைதியிழந்து போகிறேன்.
><>< 

89
உன் பேரும் அதுதான்
என் பேரும் அதுதான்
ஏன் சொல்ல வேண்டும் அதை
உரக்கவோ மெதுவாகவோ?
><>< 

90
கடிதம் ஏந்தி வந்து
நிற்கிறது
புறாவே.
><>< 

91.
சாட்சாத் என்னுடையது
சற்றுமுன் சாலையில் நீ
கண்டெடுத்த இதயம்.
><>< 

(படம்- நன்றி: கூகிள்)

7 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
கற்பனை வரிகள் அருமையாக உள்ளது...பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை

கோமதி அரசு said...

கவிதை அருமை.

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை. 87 அதிகம் கவர்ந்தது.

Rekha raghavan said...

ஆஹா அருமை.

ரிஷபன் said...

அவளைப் பார்க்கும் ஆசையைத் தூண்டுகிறீர்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவள் எதற்கோ சிரிக்கிறாள். நான் எனக்குள் தொலைந்து போகிறேன்.//

படிக்கும் என்னையும் தொலைந்து போக [சிரிக்க] வைத்தது. :)

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!