Tuesday, July 16, 2013

நல்லதா நாலு வார்த்தை... 12


வாழ்வினூடே

வழி நடக்காதீர்,

வாழ்வினூடே

வளர்ந்திடுவீர்!

-Eric Butterworth

(‘Don’t go through life, grow through life.’)

<>

விரும்புவதை செய்வதல்ல,

செய்ய வேண்டியதை

விரும்புவதே

அளிக்கிறது வாழ்க்கைக்கு

அளவிலா பேறு.

-Goethe

(‘It is not doing the thing we like to do, but liking

the thing we have to do, that makes life blessed.’)

<>

எதிலும் கவலை கொள்கிறவருக்கு

என்ன ஒரு சௌகரியம் எனில்,

நினைத்தது சரிதானென்ற

நிரூபணமோ,

சந்தோஷ அதிர்ச்சியோ

கிடைத்தபடியே இருக்கும்!

- George Will

(‘The nice part about being a pessimist is that you are constantly

being either proven right or pleasantly surprised.’)

<>

அனைத்தையும்

சரிப்படுத்துவதல்ல நம் வேலை;

அனைத்தையும்

சரியாகப் பார்ப்பது!

- Eric Butterworth

(‘Our job is not to set things right but to see them right.’)

<>


கண்டுகொண்ட அழகு

தொலைவதில்லை,

கடவுளின் வண்ணங்கள்  

மறைவதில்லை.

- John Greenleaf Whittier

(‘Beauty seen is never lost,

God’s colours all are fast.’)

<>

பொறுமையின்மை ஓர்

நற்குணம்,

அதை நாம் நம்மிடம்

பிரயோகிக்கும் வரையில்.

- Rod McKuen

(‘Impatience can be  a virtue, if you practise it on yourself.')

<>

உலகின் பொய்யர்களில்

மிக மோசம்,

சில சமயம், 

நம் பயங்களே.

-Rudyard Kipling

(‘Of all the liars in the world, sometimes

the worst are your own fears.’)

<<<<>>>>

(படம்- நன்றி: கூகிள்)

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்துமே அருமை.

மிகவும் பிடித்தது வரிசை எண்: 2

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தையும் சரியாகப் பார்ப்பது உட்பட அனைத்தும் அருமை...!

கவியாழி கண்ணதாசன் said...

அனைத்துமே உண்மை.

நிலாமகள் said...

‘அனைத்தையும்

சரிப்படுத்துவதல்ல நம் வேலை;

அனைத்தையும்

சரியாகப் பார்ப்பது!//

ஆமா இல்ல...!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
அருமை

இராஜராஜேஸ்வரி said...

சிந்திக்கவைக்கும் சிறப்பான வரிகள்..
பாராட்டுக்கள்...!

ஹ ர ணி said...

அன்புள்ள ஜனா..

வணக்கம்.

தாங்கள் தெரிவு செய்யும் ஆங்கில மேற்கோள்கள் அருமையாக உள்ளன. என்னுடைய சிறிய கருத்து யாதெனில் தாங்கள் தங்களின் மொழிபெயர்ப்பில் இன்னும் கொஞ்சம் கூர்மைப்படுத்தவேண்டும் என்பதுதான். கிட்டத்தட்ட ஹைக்கூ கவிதைபோல உருவாக்கவேண்டும். வாழ்த்துக்கள்.

tbr.joseph said...

ஜனாவை வழிமொழிகிறேன்.

கண்டுகொண்ட என்பதற்கு பதில் காணும் என்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதுபோலவே

உலகிலுள்ள அனைத்து பொய்யர்களிலும் மோசமானது சில சமயங்களில்,
நம்முடைய அச்சங்களே! என்றிருந்தால்....

ஆங்கிலம் ஒரு அருமையான, ஆழமான மொழி. அதன் பரிமாணத்தை மொழிபெயர்ப்பில் நாம் பல சமயங்களில் இழந்துவிடுகிறோம். ஆனாலும் உங்களுடைய முயற்சி வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அருமை...
//அனைத்தையும்
சரிப்படுத்துவதல்ல நம் வேலை;
அனைத்தையும்
சரியாகப் பார்ப்பது!//

பார்க்கும் பார்வையில் தான் தவறு இருக்கிறது..

ராமலக்ஷ்மி said...

அருமையான பொன்மொழிகள்.

தி.தமிழ் இளங்கோ said...

வலையுலகில் கணினி அனுபவம் என்ற தலைப்பில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும் அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அன்புடன் எழுத அழைக்கின்றேன். அவர்களுள் நீங்களும் ஒருவர்.

( எனது கணினி அனுபவங்கள் ( தொடர் பதிவு )
http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_25.html )

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!