‘இன்றைக்குத் தெரியும்
இதயத்துக்கு;. .
நாளைக்குப் புரியும்
மூளைக்கு.’
- James Stephens
(‘What the heart knows today the head will understand tomorrow.’)
<>
‘கண்ணுக்குத்
தெரிவதைப்
பிரதிபலிப்பதில்லை ஓவியம்;
தெரிய வைக்கிறது.’
- Paul Klee
(‘Art
does not reproduce the visible, but makes
visible.’)
<>
‘விட்டுத் தள்ள
வேண்டியதறிவதே
விவேகம்.’
-William
James
(‘Wisdom is learning what to overlook.’)
<>
‘எப்படி
இருக்கிறது
என்று பார்க்க வேண்டும்
எப்படி இருக்க வேண்டும்
என்றல்ல.’
-Albert
Einstein
(‘A
man should look for what is, and
not for what he thinks should be.’)
<>
‘நீளமல்ல
முக்கியம்
வாழ்க்கையின்
ஆழமே!’
-Emerson
(‘It is not length of life but depth of life.’)
<>
‘விஷயங்கள் அநேகமாய்
நடந்துவிடும் சரியாக
ஆனால்
வெறுமேபார்த்துக் கொண்டிருக்க
சில நேரம்
வேண்டும் உறுதியான மனம்.’
-Hedley
Donovan
(‘Things will probably come out all right, but sometimes it
takes strong nerves just to watch.’)
<>
‘வரும் ஒளி
உணர்ந்து
இருள் விலகுமுன்
கருக்கலில் பாடும் பறவையே
நம்பிக்கை.’
-RabindranathTagore
(‘Faith
is the bird that feels the
light
and
sings when the dawn is still dark.’)
<<<>>>
(படம்- நன்றி:கூகிள்)
15 comments:
விவேகம் நல்லா இருக்கு
நல்லதா நாலு வார்த்தை.... நல்லாவே இருக்கு.
ஆழமான அர்த்தம் பொதிந்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
ஆழம் உட்பட அனைத்தும் அருமை...
அனைத்துமே அறிவார்ந்த தத்துவங்கள் அருமை.
ஒவ்வொன்றுமே அருமை அய்யா
எல்லா பொன்மொழிகளும் அருமை.
கருக்கலில் பாடும் பறவையே
நம்பிக்கை.’//
எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
நல்லதா நச் என்ற வரிகள்...
எல்லா வார்த்தைகளுமே அழகாக உள்ளன...
அனைத்தும் நன்று.
அன்புள்ள ஜனா..
வணக்கமுடன் ஹ ரணி.
மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. அதற்கு ஒரு திறம் வேண்டும்.
எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள்.
கவிதைகள் சொல்லும் கருத்துக்களும் எளிமையாக உள் நுழைபவை.
வாழ்த்துக்கள்.
அர்த்தம் பொதிந்தவை...
//விட்டுத் தள்ள
வேண்டியதறிவதே
விவேகம்.’//
இது மட்டும் கிடைத்துவிட்டால் வெற்றி தான்!
ஜனாவின் கைவண்நத்தில் எல்லா வார்த்தையுமே நன்றாக இருக்குமே! இது மட்டும் என்ன !
கைவண்ணத்தில் என்று பிழையைத்திருத்துவதற்குள் அந்த மடல் பறந்துவிட்டது:)
அழகான மொழிபெயர்ப்பு. குறிப்பாக 'கருக்கலில் பாடும் பறவை' மிகப் பிடித்தது.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!