Monday, May 27, 2013

நல்லதா நாலு வார்த்தை .... 7


'இன்றியமையாதவராக
இருப்பது
இனிமையானதுதான். ஆனால்
இனிமையானவராக
இருப்பது அதைவிட
இன்றியமையாதது.'

-John Templeton
(‘It is nice to be important but
it’s more important to be nice.’)

** 
லகின் சுமையை
ஒருவருக்கேனும்
எளிதாக்கும் எவருமே
உபயோகமற்றவர் இல்லை.

-Charles Dickens
(‘No one is useless in this world who
lightens the burden of it to anyone else.’)

** 
முழுமையாய்
உணரும் பரவசத்தை
முதன்மையாய்
ஓரிடத்தில்
காட்டுவதே சிரிப்பு.

- Josh Billings
(‘Laughter is the sensation of feeling good all over 
and showing it principally in one place.’)  

** 

ங்கே அன்போ
அங்கே வாழ்க்கை.

-Mahatma Gandhi
(‘Where there is love there is life .’)

**

பூக்களுக்கு கதிரொளி போல
புன்னகை, மனிதருக்கு.

- Joseph Addison
(‘What sunshine is to flowers, smiles are to humanity.’)

** 
'எந்தப் பெரிய மனிதரும்
குறை சொல்வதில்லை
சந்தர்ப்பம் வாய்க்கவில்லையென்று.’

- Emerson
(‘No great man ever complains of want of opportunity.’)

** 
'அறிவிலிகள் இரு வகை ;
தம் கருத்துக்களை
மாற்றிக்கொள்ள முடியாதவர்கள்;
மாற்றிக்கொள்ள விரும்பாதவர்கள்.

- Josh Billings

(‘There are two kinds of fools: those  who can’t
change their opinions and those  who won’t.’)

****
(படம் நன்றி: கூகிள்)

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து பொன்மொழிகளும் அருமை...

இராஜராஜேஸ்வரி said...

எங்கே அன்போ
அங்கே வாழ்க்கை.’

பூக்களாய் கதிரொளியாய்

புன்னகைக்கும் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாப்பொன்மொழிகளும் அருமை. பாராட்டுக்கள்.

மிகவும் பிடித்தது:

//'அறிவிலிகள் இரு வகை ;
தம் கருத்துக்களை
மாற்றிக்கொள்ள முடியாதவர்கள்;
மாற்றிக்கொள்ள விரும்பாதவர்கள்.’//

பகிர்வுக்கு நன்றிகள்.


Anonymous said...

இனிமையானவராக இருப்பதே இன்றியமையாதது-முத்தான முதல் வரிகளுக்கு என்னுடைய வணக்கங்கள்..

ரிஷபன் said...

முழுமையாய்
உணரும் பரவசத்தை
முதன்மையாய்
ஓரிடத்தில்
காட்டுவதே சிரிப்பு !

இம்மாதிரி வாசிக்கும் போதே வரும் ரசனையில் முகிழ்க்கிறது சிரிப்பு.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமை... காந்தியின் வாக்கினை மிகவும் ரசித்தேன்.....

Yaathoramani.blogspot.com said...

நல்லதா நாலு வார்த்தை கேட்பதெல்லாம்
கூடஇப்போது கிடைத்தற்கரிய
அபூர்வப் பொருளாகிவிட்டது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha/ma 3

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைத்து வார்தைகளும் அழகு...
ரசித்தேன்...

கவியாழி said...

அத்தனையும் அற்புதம் வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

நல்ல தொகுப்பு! சிந்தனை செய் மனமே! தினமே!

ராமலக்ஷ்மி said...

‘பூக்களுக்கு கதிரொளி போல
புன்னகை, மனிதருக்கு.’

‘எங்கே அன்போ
அங்கே வாழ்க்கை.’

மிகப் பிடித்தன. இனிய தமிழில் பொன்மொழிகள்! நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!