Monday, May 6, 2013

நல்லதா நாலு வார்த்தை... 5



ன்பத்தைப் பகுத்தும்,
துன்பத்தை வகுத்தும்
மகிழ்வைக் கூட்டும்,
மனச்சுமை கழிக்கும்
நட்பு! 

- Cicero
(‘Friendship improves happiness and abates misery
by the doubling of our joy and the dividing of our grief.’)

*

ப்படியோ எங்கோ ஓர் தீர்வு
என் பிரசினைக்கு உண்டு
என்று நம்பித் தேடி
தீர்க்கமாய் முன்னேறிச் செல்பவனுக்கு
வழியும் ஒளியும்
வந்து சேருகின்றன தாமே.

–James Alexander.
(‘Light and guidance comes to the man who believes
that somehow somewhere there is a solution to his problem
and goes forward with confidence to find it..’)

*

னிமேல் ஆகவிருப்பதை
இப்போதிருக்கத் தொடங்கு.

- Eusebius Hieronymus
(‘Begin to be now what you will be hereafter.’)  

*

வாழும் காலத்தின்
வடிவம் புரிந்து
சிறப்பை அறிந்து 
நமக்கது வகுக்கும்
இலக்குகள் உணர்ந்து 
அடைய முனைகையில்
அர்த்தமுள்ளதாகிறது
வாழ்க்கை.

-Dr.S.Radhakrishnan.
(‘Life becomes meaningful only when we grasp the character
of the age we live in, see its significance, understand the
objectives it sets us and strive to realize them.’)



*
'பள்ளத்தில் வீழும்போது
பாய்கிற உயரமே  
பகரும் உன் வெற்றியை!'
-George Patton
(‘Success is how high you bounce when you hit bottom.’)



***

8 comments:

கோமதி அரசு said...

இன்பத்தைப் பகுத்தும்,
துன்பத்தை வகுத்தும்
மகிழ்வைக் கூட்டும்,
மனச்சுமை கழிக்கும்
நட்பு!’//

அருமை.
பொன்மொழிகள் எல்லாம் வாழ்க்கைக்கு வேண்டிய நாலு நல்ல வாஅர்த்தைகள்.
நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை...

வாழ்த்துக்கள்... நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.

Anonymous said...

கவிதை நடை கவனிக்க வைக்கிறது..நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை..... பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

தேர்ந்தெடுத்த பொன்மொழிகளும் தமிழாக்கமும் சிறப்பு.

ரிஷபன் said...

இனிமேல் ஆகவிருப்பதை
இப்போதிருக்கத் தொடங்கு.’

உறுத்தாத மொழி பெயர்ப்பு.

நிலாமகள் said...

எல்லாமே நல்லாயிருக்கு.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!