Sunday, May 19, 2013

நல்லதா நாலு வார்த்தை... 6




றிவாற்றல்
ஆரம்பித்து வைக்கும்
அபார வேலைகளை
உழைப்பு ஒன்றே
முடித்து வைக்கிறது.

- Joseph Joubert
(‘Genius begins great works;
labour alone finishes them.’)

*
சினமுற வேண்டாத
விஷயம் இரண்டு:
தவிர்க்க முடிவது, 
தவிர்க்க முடியாதது.
- Thomas Fuller

(‘Two things a man should never be angry at:
what he can help, and what he cannot help.’)

*
ருவரிடமே தேடாதீர்கள்
ஒவ்வொரு நற்பண்பையும்!

- Confucius
(‘Seek not every quality in one individual.’)

 *

'வெல்ல இயலாதுபோவது
வெகு தற்காலிகமானது.
வேண்டாம் என 
விட்டுவிடுவதுதான் அதை
நிரந்தரமாக்குகிறது!'

-Marilyn vos Savant
(‘Being defeated is often a temporary condition.
Giving up is what makes it permanent.’)

*
'நிரப்பக்
கொடுக்கப்பட்ட குவளையே
வாழ்க்கை.'

- William Brown
(‘Life is a glass given us to fill.’)
  
*
 மைதியான கடல்கள்
உருவாக்குவதில்லை
அருமையான மாலுமிகளை.’

- African Proverb
(‘Smooth seas do not make skillful sailors.’)
 
 *
ன்னைத் தவிர
வேறேதும்
தராது அமைதி.

-Emerson
(‘Nothing can bring you peace but yourself.’) 

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை... முக்கியமாக முடிவில்...

கவியாழி said...

அமைதியான வாழ்கையே நல்வாழ்க்கை

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாமே அருமை.

மிகவும் பிடித்தது:
அமைதியான கடல்கள் உருவாக்குவதில்லை
அருமையான மாலுமிகளை.’

பகிர்வுக்கு நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

‘தன்னைத் தவிர
வேறேதும்
தராது அமைதி.’

ஆம் அய்யா
தீதும் நன்றும் பிறர் தர வாரா

ராமலக்ஷ்மி said...

அருமையான பொன்மொழிகளின் சிறப்பான தமிழாக்கம். பகிர்வுக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

‘அமைதியான கடல்கள்
உருவாக்குவதில்லை
அருமையான மாலுமிகளை.’
அனைத்தும் அருமை ...!

ரிஷபன் said...

நிரப்பக்
கொடுக்கப்பட்ட குவளையே
வாழ்க்கை.'

அன்பினால்...

கோமதி அரசு said...

தன்னைத் தவிர
வேறேதும்
தராது அமைதி.’//
தன்னுள் தான் தேடவேண்டும் அமைதியை.
எல்லாம் அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!