Friday, April 26, 2013

நல்லதா நாலு வார்த்தை ... 4



ற்றுக்கொளல் இல்லாத
கற்பனை,
காலின்றி
சிறகிருப்பதைப்போல.
 _ Joseph Joubert

(‘He who has imagination without learning
has wings but no feet.’)

* 
ரு வார்த்தை, ஒரு புன்னகை
உடனே மாறிடுவார்
கையருகு புதியவர் 
ருசிகர நண்பராக....
பகட்டிலும் பயத்திலும்
மறுக்கிறோம் நமக்கே
மனம் வருடும் சினேகங்களை.
 -D.C.Peattie.

(‘A word, a smile and the stranger at your elbow may become
an interesting friend. All through life we deny ourselves stimulating
fellowship because we are too proud or too afraid to unbend.’)

*  
ன்னத விஷயங்களை
உன்னிடமிருந்து
கோரத் தயங்காதே
கனவிலும் நினைத்திராத
உனது சக்திகள்
ஓடிவரும் உன்
உதவிக்கு!
 - Orison Swett Marden

(‘Do not be afraid to demand great things of yourself. Powers which
you never dreamed you possessed will leap to your assistance.’)

 * 
'தேர்ந்த நல் விஷயமாயினும்
அதன்
தேடலில் தேவை
அமைதியும் நிதானமும்!'
-Cicero

('The pursuit, even of the best things,
ought to be calm and tranquil.')

 * 
றிவுடனே வளர்கிறது
ஐயம்.
 - Goethe

(‘Doubt grows with knowledge.’)

 * 
'விரும்பாத நல்
விஷயமொன்று  
திடமாகத்
தினம் செய்வதென்று
தீர்மானியுங்கள்.
வலியின்றி கடமையாற்றும்
வலிமை பெற
வழி அஃதன்றோ?
- Mark Twain

(‘Make it a point to do something everyday that you don’t 
want to do. This is the golden rule for acquiring the habit 
of doing your duty without pain.’)

<<>> 

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்துமே அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

கீதமஞ்சரி said...

பகிர்ந்த அனைத்தும் மனம் கவர்ந்து சிந்தனையைத் தூண்டின. \\கற்றுக்கொளல் இல்லாத கற்பனை, காலின்றி சிறகிருப்பதைப்போல.’ _ Joseph Joubert\\

அதிகம் கவர்ந்த பொன்மொழி இது. அழகான மொழியாக்கத்துக்கு நன்றி ஜனா சார்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் மனதை கவர்ந்தது : Cicero & Mark Twain

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

நிலாமகள் said...

வளமான மொழிமாற்றம்! கடைசி, மனசில் முதலில்.

கவியாழி said...

வலியின்றி கடமையாற்றும்
வலிமை பெற
வழி அஃதன்றோ?//அருமை உண்மைதான்

கோமதி அரசு said...

ஒரு வார்த்தை, ஒரு புன்னகை
உடனே மாறிடுவார்
கையருகு புதியவர்
ருசிகர நண்பராக....
பகட்டிலும் பயத்திலும்
மறுக்கிறோம் நமக்கே
மனம் வருடும் சினேகங்களை.
-D.C.Peattie.

அருமையாக சொல்லி இருக்கிறார்.
எல்லா பொன் மொழிகளும் மிக நன்றாக இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

கீதமஞ்சரியை நான் வழிமொழிகிறேன்..அருமையான பதிவு..

ADHI VENKAT said...

எல்லாமே அருமை. மனதை கவர்ந்தன.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!