'முன்னேறிச் செல்லும் மனதுக்கு
முக்கியம் அதன்
திசை.’
-Joseph
Joubert
(‘The
direction of the mind is more important
than its
progress.’)
*
‘மனிதர் மூவகை:
நகரவே
நகராதவர்கள்.
நகர்த்த
முடிகிறவர்கள்.
நகர்ந்து
செயலாற்றுபவர்கள்.’
- Benjamin Franklin
(‘All mankind is divided into three classes: those that
are immovable; those that are movable and those that
move.’)
*
‘வாழும் உணர்வே
போதும் ஆனந்தம்.’
- Emily Dickinson
*
‘முனைந்து ஆழ்ந்திடும்
இனிய
நினைவுகள்போல்
கசப்பான
எண்ணங்களைக்
களைந்திடஏதுமில்லை.’
- Hans Selye
(‘Nothing erases unpleasant thoughts more effectively
than conscious
concentration on pleasant ones.’)
*
‘முதலில்
தன்னோடு
கைகுலுக்கிக் கொள்வதே
ஒரு மனிதனின்
முதற் பொறுப்பு!’
- Henry Winkler
(‘A human being’s first responsibility is
to shake hands with himself.’)
‘அதி திறனுடன்
வழங்கும்
ஆறுதல்
வார்த்தைகள்,
மனிதன்
அறிந்து
வந்திருக்கும்
ஆதி மருத்துவம்.’
- Louis Nizer
(‘Words of comfort, skillfully administered,
are the oldest therapy known to man.’)
<<>>
(படம்: நன்றி: கூகிள் )
13 comments:
‘முதலில் தன்னோடு
கைகுலுக்கிக் கொள்வதே
ஒரு மனிதனின்
முதற் பொறுப்பு!’//
அருமையாக இருக்கிறது
பொன்மொழிகள்.
நல்லதாய் நாலு வார்த்தை தலைப்பு அருமை.
அனைத்தும் அழகோ அழகு. பாராட்டுக்கள், உங்களை நீங்களே கைகுலுக்கிக்கொள்ளலாம்.
நல்ல பொன்மொழிகள்.
அனைத்தும் அருமை... மிகவும் பிடித்ததை அரசு அவர்கள் சொல்லி விட்டார்கள்...
நன்றி...
அன்புள்ள ஜனா..
வண்க்கம்.
மொழியின் வளத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று மொழிபெயர்ப்பும் ஆகும். நல்ல சமுகத் தேவையான செய்திகளை மொழிபெயர்க்கிறீர்கள். எளிமையாகவும் புரிந்துகொள்ளுதலிலும் சிக்கலின்றி உள்ளன. தொடர்ந்து செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
மொழிபெயர்ப்பு இன்னும் கவனம்பெற்று அதற்கென்று தனியான கூடுதல் கவனம் பெறும் வளமான எதிர்காலம் இருக்கிறது. நானும் இதுபோன்ற மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டிருக்கிறேன்.
//வாழும் உணர்வே
போதும் ஆனந்தம்.’//
அருமை.
அனைத்தையும் ரசித்தேன்.....
கடைசி மூன்றும் மனசுக்கு நெருக்கமாய்.
பிறமொழியறிவதின் பெரும்பலன்(ம்) இருமொழிக்குள்ளும் நல் இலக்கிய இணைப்பாய் இருப்பதே.
\\‘அதி திறனுடன் வழங்கும்
ஆறுதல் வார்த்தைகள், மனிதன்அறிந்து வந்திருக்கும் ஆதி மருத்துவம்.’\\
மிகவும் மனம் கவர்ந்த பொன்மொழி. பகிர்ந்த அனைத்தும் ரசிக்கவைப்பதோடு சிந்திக்கவைத்தன. நன்றி ஜனா சார்.
நிச்சயமாய் அனைத்துமே நல்லதான நாலு வார்த்தைகள் தாம்!!
வணக்கம்...
இங்கு என் முதல் வருகை இது.
அங்கு வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!
நயந்தரும் நாலுவார்த்தை நல்ல
பயன்தரும் வளரும் வாழ்வும்!
அருமையான தொகுப்பினை வழங்கியுள்ளீர்கள் இங்கும்.
வாழ்த்துக்கள்!
நல்லதா நாலு வார்த்தை சொல்லி இருந்தீர்கள்! எல்லாமே சிந்தனையைத் தூண்டுவன.
அருமையான பொன் மொழிகள்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
பொன்மொழிகள் அனைத்தும் போற்றவேண்டிய கண்மணிகள்
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!