Monday, April 8, 2013

நல்லதா நாலு வார்த்தை...

    
நான்
பார்த்த அனைத்துமே
பார்க்காத அனைத்துக்குமாக
படைத்தவனை நம்பப்
படிப்பிக்கின்றது.’

-- Emerson

(‘All I have seen teaches me to trust
the Creator for all I have not seen.’)

* 
கொஞ்சம் நம்மோடு
கொணராமல் எங்கு தேடினும்
கிடைக்காது கவிதை.

Joseph Joubert.

(‘You will find poetry nowhere
unless you bring some of it with you.’)


 *
ழமான யோசனையும்
அபாரமான உழைப்புமின்றி
சாரமான விஷயமேதும்
சாதிக்கப் பட்டதில்லை.

- J.R.D.Tata

(‘Nothing worthwhile is ever achieved
without deep thought and hard work.’)


 *
விரைவில் புரிய
விழைகிறோம் ஈகை...
விரைவென்பது எத்தனை
விரைவில் தாமதமாகி
விடும் என்பதறியோம்.

-Emerson.

(‘You cannot do a kindness too soon,
for you never know how soon it will be too late.’)

* 
தேவையற்ற விசனத்திலும்
அர்த்தமற்ற எதிர்பார்ப்பிலும்
வினாடி கூட
வீணாக்க முடியாதபடி
வெகு சிறியது வாழ்க்கை.

-Dorathy Strange

(‘Life is too brief to waste even one moment
in useless regret or vain expectation.’)


 *
'இன்னும் தனிமையில் வாடும்
இன்னோர் இதயம் நாடும்
இதயம் எதுவும்
தனியே வாடுவதில்லை.

- Frances Ridley Havergal

(‘Seldom can the heart be lonely,
if it seeks a lonelier still.’)

<<<>>>

(படம்- நன்றி: கூகிள் )

12 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை. சான்றோர் சொன்ன வார்த்தைகளை அழகுத் தமிழில் தந்திருக்கிறீர்கள். நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை. நல்ல தமிழாக்கம்......

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்துமே அருமை. முதலில் உள்ளது முதல் தரமாக உள்ளது.

// ’நான் பார்த்த அனைத்துமே, பார்க்காத அனைத்துக்குமாக
படைத்தவனை நம்பப் படிப்பிக்கின்றது.’//

-- Emerson

(‘All I have seen teaches me to trust
the Creator for all I have not seen.’)

பகிர்வுக்கு ந்ன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை...

மிகவும் பிடித்தது : J.R.D.Tata

Yaathoramani.blogspot.com said...

அருமையான கவிதைகள்
அருமையான மொழிபெயர்ப்பு
வாழ்த்துக்கள்

Unknown said...



நாலு வார்த்தை சொன்னாலும் நறுக்கென்று சொன்னீர்கள்!

உஷா அன்பரசு said...

அருமை!

கோமதி அரசு said...

நல்ல சிந்தனை முத்துக்கள்.

Rekha raghavan said...

நாலும் நல்லா இருக்கு, தமிழ் மொழிபெயர்ப்பும் அபாரமா இருக்கு!

ரேகா ராகவன்.

sury siva said...

// பூமி பூக்களில் சிரிக்கிறது' என்றார் எமெர்சன். உங்கள் படங்களில் பூக்கள் அழகாகச் சிரிக்கின்றன! //

என்ற உங்கள் பின்மொழியில் மனம் கிறங்கி இங்கு வந்தேன்.

நிகழ்வது ஒன்று தான்., அதை பார்க்கும் கோணங்கள் தான் வேறு.


// நான்
பார்த்த அனைத்துமே
பார்க்காத அனைத்துக்குமாக
படைத்தவனை நம்பப்
படிப்பிக்கின்றது.’//

எமர்சனோ நீங்களோ சொற்களிலே சதிராடுகின்றீர்கள் என்றும் சொல்லலாம்.

உண்மைப்பொருளை பகர்ந்தமைக்கு
என்னை உணரச்செய்தமைக்கு
உளமாற நன்றியும் செலுத்தலாம்.

அவரவர் மன நிலை.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

கீதமஞ்சரி said...

வாழ்க்கையை வாழ்ந்துபார்க்கத் தூண்டும் அருமையான வரிகளை அழகுத்தமிழில் பகிர்ந்தமைக்கு நன்றி ஜனா சார்.

Ranjani Narayanan said...

இனிய விஜய வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!