Tuesday, March 19, 2013

அவனுக்கு அவனை ஒரு அறிமுகம்...


அன்புடன் ஒரு நிமிடம் - 28

அவனுக்கு அவனை ஒரு அறிமுகம்...

வாசு அலுவலகத்தில் தன் அறையில் மணித்துளிகளை எண்ணி செலவிட்டுக் கொண்டிருந்தார். எட்டிப் பார்த்த ரமேஷ், “மே ஐ?” என்றபடி உள்ளே வந்தான்.

அடுத்த இரு தினம் லீவு வேண்டியிருப்பதை சுருக்கமாகத் தெரிவித்தான். மைத்துனனின் திடீர் எங்கேஜ்மெண்ட்.

கொஞ்சமும் அதை எதிர்பார்க்கவில்லை வாசு என்பதை அவர் முகம் சொல்லிற்று. இன்னும் இரண்டே தினங்களில் அவர்கள் அந்த முக்கியமான சாஃப்ட்வேர் டிசைனை முடித்து கிளையண்டுக்குக் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே அந்த அவகாசம் பத்தாது என்று டீம் மூணு முணுத்துக் கொண்டிருக்கிறது. கீ பொசிஷனில் இருப்பவன் லீவ் கேட்கிறான்...
 
அதிர்ந்ததைக் காட்டிக் கொள்ளாமல் அவர் கேட்டார், “நாளைக்கா? இப்ப நாம இருக்கிற இந்த கிரக்ஸ் அஃப் த சிச்சுவேஷனில் எப்படி உன்னால் இதைக் கேட்க முடியுது ரமேஷ்?”

தட்ஸ் ஆல்வேஸ் தேர் சார். அதைப் பார்த்தா முடியுமா? வீட்டிலும் இப்படி ரொம்ப முக்கியமான விசேஷங்கள் சில சமயம் திடீர்னு வரத்தானே செய்யும்?”

இருந்தாலும் சில விஷயங்கள் நாமதான் நின்று செய்யணும்னு இல்லாதப்ப, கம்பெனி நிலைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கணும் இல்லையா?...”

இல்லே சார், ஒரே மைத்துனன் எனக்கு அவன். நான் பிராமிஸ் பண்ணிட்டேன் அவனிடம்..

அவர் தொடர்ந்து பல்வேறு விதமாக அவனிடம் வாதாடி தோல்வியுற்றார். ஆல்ரைட், இஃப் யு இன்ஸிஸ்ட், நான் முடியாதுன்னு சொல்லலே.

சாரி சார்…” என்றபடி எழுந்தான். அப்போதுதான் கவனித்தவன் கேட்டான், “கையிலே என்ன சார் கட்டு?”

அதுவா? நேத்து மாம்பழம் வெட்டும்போது கத்தி பட்டுவிட்டது. லேசான கீறல்தான். ஆனா பாரு அரை மணி நேரமா போராடறேன், ஒரு சின்ன லெட்டர், அதைக்கூட கம்போஸ் பண்ண முடியலே..

அப்படியா நான் அடிச்சுத் தர்றேன், நகர்த்துங்க டேப்லெட்டை இப்படி!

நகர்த்தினார். சொல்லுங்க. என்ன மெய்ல்?”

அடுத்த பிக் ஆஃபர் தான். பெரிய கிளையண்டாக்கும். ரிக்வஸ்ட் லெட்டர் இது,” என்றவர் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ...மேற்படி முன் வரிசை கம்பெனிகளுக்கெல்லாம் எங்கள் நிறுவனம் சிக்கலானதும் சவால் விடுவதுமான டாஸ்க் ஒவ்வொன்றுக்கும் கம்பீரமான சொல்யூஷன்களை உரிய காலத்தில் கொடுத்துள்ளதை அவர்களின் மேற் குறித்த கடித வரிகளிலிருந்தும் தொடர்ந்த ஒப்பந்தங்களிலிருந்தும் நீங்களே அறிந்து கொள்ளலாம். 
"எங்கள் டீம் பற்றி நான் சொல்ல வேண்டும். எங்களின் டெவலப்பர்களும் சரி டெஸ்டிங் டீமும் சரி காலம் என்ற ஒரு பரிமாணம் இருப்பதையே மறந்து காரியத்தில் ஈடுபடுகிறவர்கள். தங்களின் எல்லா பின்னணிகளையும் துறந்து விடுகிறவர்கள். கிளையண்ட் நீட் என்று வந்து விட்டால் அதை முடித்துவிட்டுத்தான் மறுவேலை என்று இறங்கி நிற்பவர்கள். அவர்களின் அர்ப்பணிப்பு என்ற மூச்சில்தான் எங்கள் கம்பெனி இயங்கி சாதனைகளை அடுக்கி வருகிறது.... ஆகவே உங்கள் பணி எத்தனை பெரியதாக, வித்தியாசமானதாக இருந்தாலும் அது எங்கள் டீம் திறமைக்கு அப்பாற்பட்டதல்ல என்ற உறுதியில் இந்த ஆர்டரை நான் கோருகிறேன்....

அவர் சொல்லி முடித்தார். இவன் டைப் செய்து முடித்துவிட்டு எழுந்தான்.

நல்ல வேளை ரமேஷ், சமயத்தில் உதவினாய். இந்த மெயிலை உடனே அனுப்பியாகணும். ஆல்ரைட். கன்வீ மை விஷெஸ் டு யுர் கசின்.

ஓகே. அதையும் என் வாழ்த்துடன் சேர்த்து மெயில் பண்ணிடறேன் அவனுக்கு!

மெயிலா? என்ன சொல்றே?”

எங்கேஜ்மெண்டுக்கு நான் போகலேன்னு சொல்றேன், என்றான் அவன்.


('அமுதம்' டிசம்பர் 2012 இதழில் வெளியானது)
<<<>>>
(படம், நன்றி: கூகிள்)


10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உணர வைத்த விதம் அருமை...

அலுவலக ஞாபகம் வந்ததும் உண்மை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அலுவலக டீம் வொர்க்க்கின் முக்கியத்துவத்தையும், வாடிக்கையாளருக்கு, நிறுவனம் கொடுத்துள்ள உறுதிமொழிகளையும், ரமேஷ் மிக நன்றாக தானே உணர்ந்து கொள்ளுமாறு செய்தது, அந்தக்கடிதம்.

சிறப்பான படைப்பு. பாராட்டுக்கள்.

அமுதத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

அவனுக்கு அவனை அறிமுகம் செய்த விதம் அருமை:)!

Yaathoramani.blogspot.com said...

Arumai

Mahi said...

:) good one! :)

But now a days it's very rare to see these kind of sincere people Jana sir! Most of the "Vasu"'s will simply sent the mail and take the leave..Kaalam maari poyiruchu!

Nice to read these kind of positive note stories.

கோமதி அரசு said...

பொறுப்பை அழகாய் உணரவைத்த கதை.

வெங்கட் நாகராஜ் said...

அருமை.....

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

கரந்தை ஜெயக்குமார் said...

அறிமுகம் அருமை

Ranjani Narayanan said...

பாஸின் உத்தி நன்றாக இருக்கிறது!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!