பிணக் குவியல்களின் மத்தியில்
நான் வாழ்கிறேன்
அதோ அங்கே பாத் ரூமில் ஒரு
கரப்பான் பூச்சி செத்துக் கிடக்கிறது
என் கட்டிலைச்சுற்றி சில மூட்டைப் பூச்சிகளின்
உதிரம் வடியும் சடலங்கள்
அடித்துப்போட்ட கொசுக்கள் பத்துப் பதினாறு
அவ்வப்போது என் மேஜையில்
எறும்புகளின் வெற்றுடல்களோ
எண்ணிக்கையில் அடங்குவதாயில்லை.
எதுவுமே என்னைச் சலனப் படுத்தவில்லை.
என்றாலும் முந்தாநாள்
தெருவில் யாரோ அன்று
இறந்திருந்த வீட்டைத் தாண்டும்போது
ஏனோ சற்று ஒதுங்கிப் போகிறேன்...
<<<>>>
9 comments:
மனிதனுக்கு தரும் மரியாதை...?!
//யாரோ அன்று இறந்திருந்த வீட்டைத் தாண்டும்போது
ஏனோ சற்று ஒதுங்கிப் போகிறேன்...//
சிந்திக்க வைக்கும் சிறந்த படைப்பு தான்.
மனித உயிர் என்பதால் மனிதனுக்கு சற்றே ஒதிங்கிப் போகத்தோன்றுகிறதோ? என்னவோ!
சிறந்த கவிதை.......
சக உயிர் என்று எண்ணும்போது
சலனப்படுவது இயற்கைதானே ..!
மனித உயிர் சலன்ப்படுத்துகிறது மற்றவை நமக்கு உயிர்களாய் தெரிவது இல்லை.
நிதர்சனம்.
மனித இயல்பை அழகாய் வடித்து விட்டீர்கள் !
ஒரு வித்தியாசமான விஷயத்தை கவிதையாக்கி மனதை கனக்கச் செய்துவிட்டீர்கள் !
ரேகா ராகவன்.
சிறப்பான வரிகள். மற்றவையெல்லாம் நமக்கு உயிர்களாக தெரிவதில்லை...:(
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!