Friday, December 14, 2012

உள்ளீடு




தோசை வார்ப்பது லேசாயில்லை. 

எப்படி எப்படியெல்லாமோ

வார்த்துப் பார்க்கிறோம்

முழு திருப்தியான வடிவம்

வருவதேயில்லை

ஓரத்தில் சற்று வீங்கி

அல்லது கரிந்து

நடுவில் குழி விழுந்து

அல்லது உப்பலாகி 

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி

ஆனால் எல்லா வடிவத்திலும்

இருந்து விடுகிறது ஒரு தோசை

வாழ்க்கையை மாதிரி.

<<>>






13 comments:

ராமலக்ஷ்மி said...

உண்மைதான். அருமை:)!

Rekha raghavan said...

முயற்சிப்பதில் இருக்கிறது வாழ்க்கை என்று தோசை வார்ப்பதுடன் ஒப்பிட்டு சொன்னது அருமை.

ரேகா ராகவன்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு தோசைக்குள் வாழ்க்கையை அடிக்கிய நீர்
உண்மையில் கவிஞர்தாங்க..


அழகிய சிந்தனை

மனோ சாமிநாதன் said...

ஒரு சாதாரண தோசைக்குள் வாழ்க்கையையை அடக்கி கவிதை சொல்லியிருக்கும் உங்களுக்கு இனிய பாராட்டுக்கள்!

Yaathoramani.blogspot.com said...

ஆனால் எல்லா வடிவத்திலும்
இருந்து விடுகிறது ஒரு தோசை
வாழ்க்கையை மாதிரி.//

அரிதான விஷயத்தை
அன்றாட விஷயத்தில் சொல்லிப் போனவிதம் அருமை
வாழ்த்துக்கள்


வெங்கட் நாகராஜ் said...

வாழ்க்கையின் தத்துவத்தினை ஒரு தோசை கொண்டு விளக்கியது அருமை....

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆம். ஒரு தோசையைப்போல மற்றொன்று உருவத்தில் இருப்பது இல்லை.

நம் வாழ்க்கையும் அது போலவே தான் எப்போதும் ஒரே மாதிரி இருப்பது இல்லை.

நேற்று போல இன்று இல்லை. இன்று போல நாளை இருக்கப்போவதும் இல்லை.

வாழ்க்கைத் தத்துவத்தை சாதாரண தோசை மூலம் சொன்னது ஸ்பெஷல் ரவா தோசை போல நல்ல முறுகலாகவும் ருசியாகவும் உள்ளது.

பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

தோசைக்குள் வாழ்க்கை தத்துவம் அடங்கி இருக்கே!

வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் ஜனா - அருமை அருமை - சிந்தனை அருமை - ஆமாம் - வாழ்க்கையினைத் தோசையுடன் ஒப்பிட்டி விட்டீர்களே ! உண்மை தன் - சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையும் தோசையும் ஒன்று தான் எனத் தோன்றுகிறது - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

ப.கந்தசாமி said...

தோசை எப்படி இருந்தா என்னங்க, ருசிதான் முக்கியம். வாழ்க்கையும் அப்படித்தான்.

தமிழ் காமெடி உலகம் said...

ஒரு தோசையை வைத்தே வாழ்க்கையோட தத்துவத்தையே சொல்லிட்டிங்க.....இன்னும் ஏதாவது வைத்து புதுசா யோசித்து சொல்லுங்க.....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

இராஜராஜேஸ்வரி said...

வாழ்க்கைதத்துவம் தோசையிலா !

ரிஷபன் said...

தோசையை ஆசையாய் படித்தேன்..

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!