Monday, December 17, 2012

மார்கழி




மாதங்களில் நானென்று

மாதவன் சொன்ன

மார்கழி பிறந்ததின்று..

காலை அதிகாலையில்

களித்தெழுந்த மனம்

கனிந்து அவன்பால் உருக

நாடும் வீடும் சுற்றம்

நாம் உள்ளும் எல்லாரும்

நலமே பெற இறைஞ்சிற்று


வாசலிலே வண்ணக் கோலம்

வார்த்தையெலாம் ராம நாமம்

குளிர் பனியில் கத கதப்பு

கூடவே வரும் சுறு சுறுப்பு

வலம் வரும்போது மனதில்

இடம் பெறும் இதமொன்று

இறைவன் பதமே சதமென்று.

<<>> 

9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மார்கழிக்கு ஏற்ற மனதை மயக்கும் கவிதை.

ரிஷபன் said...

நாடும் வீடும் சுற்றம்
நாம் உள்ளும் எல்லாரும்
நலமே பெற இறைஞ்சிற்று

Good Prayer !

Unknown said...

ஓங்கி உலகளந்த' உத்தம் புகழ்தன்னை பாராட்டிப் பாடிய தங்கள் கவிதை மிகவும் நன்று!

cheena (சீனா) said...

அன்பின் ஜனா - மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் - அதிகாலையில் மகிழ்ச்சியுடன் மனம் அனைவரும் நலம் பெற மாதவனை வ்ணங்கியது - அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை.

இராஜராஜேஸ்வரி said...

இறைவன் பதமே சதமென்று
இதமான மார்கழிமாதப்பகிர்வுக்கு
இதயம் நிறைந்த பாராட்டுக்கள்..!

கோமதி அரசு said...

வாசலிலே வண்ணக் கோலம்

வார்த்தையெலாம் ராம நாமம்

குளிர் பனியில் கத கதப்பு

கூடவே வரும் சுறு சுறுப்பு

வலம் வரும்போது மனதில்

இடம் பெறும் இதமொன்று

இறைவன் பதமே சதமென்று.//

சுருக்கமாய் அழகாய் மார்கழி சிறப்பை சொல்லிவிட்டீர்கள்.
இறைவன் பதமே சதம்.

Yaathoramani.blogspot.com said...

மார்கழி மாத சிறப்புப் பதிவு
மிக மிக அருமை
இயல்பாக வந்து விழுந்த
இயைபுத் தொடை உள்ளம் கவர்ந்தது
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Ranjani Narayanan said...

மார்கழிக்குளிருக்கேற்ற இதமான பிரார்த்தனை மிகச் சிறப்பு!

என்னுடைய 'முப்பதும் தப்பாமே...!' இணைப்பு:
http://thiruvarangaththilirunthu.blogspot.in/2012/12/blog-post_16.html

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!