Tuesday, May 1, 2012

அளவோடு...




நான் அறைக்குள் நுழைந்தபோது நண்பன் கதிரேசன் தன் கம்பெனியின் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு இன்டர்வியூ நடத்திக் கொண்டிருந்தான்.

முதலில் நுழைந்த ஆனந்தி, ஒவ்வொரு கேள்விக்கும் விலா வாரியாக பதிலைச் சொன்னாள்.

அவள் சென்றதும்... உதட்டைப் பிதுக்கினான், ப்ச்!

என்னடா பதில் எல்லாம் சரியாத்தானே சொன்னாள்?”

சரிதான். ஆனால் ரொம்பப் பேசாறாள். இவ்வளவு வளவளன்னு பேசறவங்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது.

அடுத்தாற்போல வந்த ராணி முதலில் வந்தவளுக்கு நேர் எதிர்.  நறுக்கென்று ரெண்டு வார்த்தையில் பதில் தந்தாள்.

ரொம்ப அளந்து பேசறாள் வார்த்தையை. சரிப்பட்டு வரமாட்டாள்.

அதுவும் பிடிக்கலே, இதுவும் பிடிக்கலே. சும்மா காலம் கடத்தறானா?

அடுத்து வந்த அகல்யாவைத் தேர்ந்தெடுத்து விட்டான்.

புருவங்களை உயர்த்திய என்னிடம் சொன்னான். இவங்க பார்க்கப் போறது ரிசப்ஷனிஸ்ட் வேலை. தேவையான இடத்தில் விளக்கவும் தேவையான இடத்தில் வாயை மூடிக்கொள்ளவும் தெரியணும். அதான் ரெண்டிலும் அளவோடு இருந்த இந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுத்தேன்!

(குமுதம் 13- 06- 2007 இதழில் வெளியானது.)

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“இவங்க பார்க்கப் போறது ரிசப்ஷனிஸ்ட் வேலை. தேவையான இடத்தில் விளக்கவும் தேவையான இடத்தில் வாயை மூடிக்கொள்ளவும் தெரியணும். அதான் ரெண்டிலும் அளவோடு இருந்த இந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுத்தேன்!”//

சரியான தேர்வு தான்.

ப.கந்தசாமி said...

அகல்யா எப்படிப் பேசினாள்னு சொல்லாமலேயே அவ செலக்ட் ஆயிட்டாள்னா, அவ முன்பே தேர்வு செய்யப்பட்டவளா இருக்கணும்.

கீதமஞ்சரி said...

செய்யவிருக்கும் பணிக்குத் தேவையான அளவில் திறமைகளை வெளிபடுத்துவதும் ஒரு திறமைதான். அந்த வகையில் அகல்யா திறமைசாலிதான். அவளைத் தேர்ந்தெடுத்த கதிரேசனும் கூட. சின்னக் கதையிலேயே பெரிய கருவை விளக்கிவிடுகிறீர்கள். பாராட்டுகள்.

Yaathoramani.blogspot.com said...

கதை கூட அப்படித்தானே இருக்கிறது
சுருக்கமாக இருந்தாலும்
நிறையச் சொல்லிப் போகும் கதை
வாழ்த்துக்கள்

Rekha raghavan said...

ஒரு பக்கக் கதைக்கான அளவோடு சும்மா 'நச்'ன்னு இருக்கு!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல செலக்‌ஷன்...

குறையொன்றுமில்லை. said...

நல்ல கதை. வாழ்த்துகள்.

முத்தரசு said...

ஒ அப்படி............ சர்தான்

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! அகல்யாவிடம் என்ன கேள்விகள் – அவர் பதில்கள் என்ன என்று சொல்லப் படவே இல்லை. செலக்‌ஷன் சரியா என்று சொல்ல முடியவில்லை.

ரிஷபன் said...

குறுங்கதையில் சொல்ல முடிந்த அளவில் சொல்லி புரிய வைத்து விட்டீர்கள்.

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!