அன்புடன் ஒரு நிமிடம் – 6
ரசனைக் குளியல்
தலை கலைந்திருந்தது. தளர்வாகவும் சோர்வாகவும் காணப்பட்டான் கட்டிலில்
சாய்ந்திருந்த கிஷோர். உள்ளே நுழைந்த ராகவ் முகத்தில் கேள்விக்குறி.
"அட உடம்பு சரியில்லையா என்ன, நான்
நாளைக்கு வர்றேன்.." என்று கிளம்ப எத்தனித்தார்.
''ஆமா. ஆபீசில் டென்ஷன். வீட்டிலும் கொஞ்சம் பிரசினை. தலையெல்லாம் சூடா இருக்கு. ஒரு குளியல்
போட்டுப் பார்க்கலாமான்னு
யோசனை. அல்லது ஒரு ரெண்டு மணி நேரம் தூங்கலாம். ஆனா தூக்கம் வராது. அப்படியே கண்ணை
மூடி படுத்திருந்தால் கொஞ்சம் பெட்டர் ஆகும்.''
"இதுக்கு முந்தி இப்படி பண்ணியிருக்கியா?''
''பண்ணியிருக்கேன். குறைஞ்சதில்லை தான். ஆனா அதைத் தவிர வேறென்ன பண்ண முடியும்?''
ராகவ்
உட்கார்ந்தார். ''அதான் ஒண்ணும் வொர்க் அவுட் ஆகாதுன்னு சொல்றே இல்லே? அப்புறம்
எதுக்கு படுத்து பாயைப் பிறாண்டிக்கொண்டு? அட, வந்த விஷயத்தை மறந்துட்டேனே, உனக்கு அகதா கிறிஸ்டி நாவல்
ரொம்பப் பிடிக்கும்னு சொல்லுவியே? ஒரு நல்ல புக் கிடைச்சது. ‘எண்ட்லெஸ் நைட்’. இப்ப சும்மா
படுக்கிறதுக்கு பதில் இதைப் படியேன்.''
''இப்பவேவா?''
''நாளைக்கு இதைத் திருப்பிக் கொடுக்கணும். படிச்சுரு உடனே.'' என்றவர்
கிளம்பிப் போய்விட்டார்.
சரியாக மூன்று மணி நேரம் கழித்து போன் பண்ணினார்.
''ஏண்டா கிஷோர், தலையெல்லாம் சூடா இருக்குன்னியே, இப்ப எப்படி இருக்கு?”
''அதுவா? நானே
உங்களுக்கு போன் பண்ணணும்னு இருந்தேன்... நீங்க கொடுத்த அந்த சுவாரசியமான
புத்தகத்தை இப்பதான் படிச்சு முடிச்சேன். இப்ப ஐ ஃபீல் குட் மாமா...சூடா
இருந்த மைண்ட் இப்ப கூலாயிடுச்சி.''
''அதனால தான் அந்த புத்தகத்தைக் கொடுத்தேன். இந்த மாதிரி பிரசினை ஏற்படும்போது, தலையெல்லாம்
எரிச்சலா உணரும்போது அலட்டாதே. பிடித்த ஒரு புத்தகத்தை பிரிச்சுப் படிக்க
ஆரம்பிச்சுட்டா மனசெங்கும் இனிமையான எண்ணங்கள் உண்டாகிறதில்லையா, அது நம் மனத்தைக் கூல் பண்ணிடும்.
எரிச்சலோ தலைவலியோ விலகிப் போயிடலாம். பிடிச்சதைப் படிக்கிற பிரயோஜனம் வேறே.''
கூலாகப் புன்னகைத்தான் கிஷோர்.
<<<<>>>>
('அமுதம்' - மே 2012)
5 comments:
//பிடிச்சதைப் படிக்கிற பிரயோஜனம் வேறே//
உண்மைதான் உங்கள் பதிவை படிச்சதும் ஏற்பட்டது.
//இந்த மாதிரி பிரசினை ஏற்படும்போது, தலையெல்லாம் எரிச்சலா உணரும்போது அலட்டாதே. பிடித்த ஒரு புத்தகத்தை பிரிச்சுப் படிக்க ஆரம்பிச்சுட்டா மனசெங்கும் இனிமையான எண்ணங்கள் உண்டாகிறதில்லையா, அது நம் மனத்தைக் கூல் பண்ணிடும். எரிச்சலோ தலைவலியோ விலகிப் போயிடலாம். பிடிச்சதைப் படிக்கிற பிரயோஜனம் வேறே.''//
100% உண்மை. இது புத்தகம் படிக்கும் ஆர்வமுள்ளவர்களால் மட்டும் உணர முடியும்.
நான் பலமுறை உணர்ந்துள்ளேன்.
பகிர்வுக்கு நன்றி.
ரசனைகளே வாழ்வை சுவாரஸ்யமாக வைத்துள்ளன. அவையே மருந்தாகவும் அமையும் என்பதை சொல்லியிருக்கும் விதம் அருமை.
பிடித்த ஒரு புத்தகத்தை பிரிச்சுப் படிக்க ஆரம்பிச்சுட்டா மனசெங்கும் இனிமையான எண்ணங்கள் உண்டாகிறதில்லையா, அது நம் மனத்தைக் கூல் பண்ணிடும்.
ரசனையான பகிர்வு !
பிடித்த ஒரு புத்தகத்தை பிரிச்சுப் படிக்க ஆரம்பிச்சுட்டா மனசெங்கும் இனிமையான எண்ணங்கள் உண்டாகிறதில்லையா, அது நம் மனத்தைக் கூல் பண்ணிடும்//
நானும் இதை பலமுறை அனுபவித்துள்ளேன் சார்.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!