அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறான்
ஆண்டவன் என்மேல்
ஆண்டவன் என்மேல்
அதில் சந்தேகமேயில்லை
எத்தனையோ நான் வேண்டினாலும்
அவன் தடை சொல்வதில்லை.
ஏனெனில் என்னைவிட அவனுக்கு
ஏனெனில் என்னைவிட அவனுக்கு
நன்றாகத் தெரிந்திருக்கிறது
எவ்வெப்போது எனக்கு
என்னென்ன வேண்டியது என்பது.
உணவோ பட்டினியோ
உணவோ பட்டினியோ
செல்வமோ செழிப்பின்மையோ
சாதனையோ சோதனையோ
சற்றைப் பொழுதுக்கு வேதனையோ
அததை அந்தந்த சமயங்களில்
அளிக்கத் தவறுவதே இல்லை
அவன்...
6 comments:
”அறிவான் அவன்”
ஆம். அனைத்தும் அறிந்தவன். அவனே ஆண்டவன்.
நல்ல பகிர்வு.
//எவ்வெப்போது எனக்கு
என்னென்ன வேண்டியது என்பது.//
அந்த ஆண்டவனுக்கும் தெரிந்திருக்கிறது உங்களுக்கும் தெரிந்திருக்கிறது எதை எதை எப்போது பதிவுலக ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை. நல்ல சிந்தனை.
அவனன்றி ஓரணுவும் அசையாது; உண்மை!
தங்கள் கவிதையும் அதுவே! உண்மை!
சா இராமாநுசம்
எவ்வெப்போது எனக்கு
என்னென்ன வேண்டியது என்பது.
சத்தியமான வார்த்தை ஜனா ஸார்.
மதம் கடந்த ஆன்மீகத் தெளிவை
அழகாகச் சொல்லிப்போகும் அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறான்
ஆண்டவன் என்மேல்
அதில் சந்தேகமேயில்லை//
:)
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!