Wednesday, March 14, 2012

முதல் முதலாக...



மூட மட்டுமல்ல இமைகள் 
திறக்கவும்.

வெகுமதிக் கோப்பை 
தளும்புகின்றது 
சிந்தும் வியர்வை.

முதலிடத்துக்கான 
முதலீடுகளில் 
முதலிலிருப்பது 
முயற்சியே.

ரவு விடியலில் 
முடிவது போல 
உழைப்பு உயர்வில்.

ந்துகிற முயற்சிக்கேற்ப 
முந்துகிறாய் பாதையில்.


வெற்றிக்கில்லை தனியே 
ஒரு ராஜ பாட்டை
எனவே பொருட்படுத்தாதே   
நீ படும் பாட்டை.

வலைப் படாதே என்று 
சொல்ல மாட்டேன்
கவலைப் படு
உன் உழைப்பின் போதாமை பற்றி
உள்ளுக்குள் முயலாமை பற்றி
முயல்- ஆமை பற்றி.

லகம் உன் காலடியில் 
அதில் சேர்ந்திருக்கும்
புழுதியின் கனத்துக்கேற்பவே..
 

ன்று உழைத்துக் 
களைப்படைகிறாய்
நாளை பிழைத்துக் 
களிப்படைகிறாய்
இல்லையேல் வாழ்வில் 
களையப் படுகிறாய்.  


நிறைய வேர்வை சிந்திவிட்டு 
நிலவை ஏன் தேடுகிறாய்?
ஏற்கெனவே வந்துவிட்டது
அது உன் சட்டைப் பைக்குள். 
<><><>

14 comments:

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!

// வெற்றிக்கில்லை தனியே
ஒரு ராஜ பாட்டை
எனவே பொருட்படுத்தாதே
நீ படும் பாட்டை. //

வெற்றியை மட்டுமே நினைப்பவர்க்கு முத்திரை வரிகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அறிவுரைகள்.... கவிதை மூலம் கிடைத்த வைரமொழிகள்....

குறையொன்றுமில்லை. said...

நிறைய வேர்வை சிந்திவிட்டு
நிலவை ஏன் தேடுகிறாய்?
ஏற்கெனவே வந்துவிட்டது
அது உன் சட்டைப் பைக்குள்.
<><><>

மிக அழகானவரிகள் கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்.

ஷைலஜா said...

//நிறைய வேர்வை சிந்திவிட்டு
நிலவை ஏன் தேடுகிறாய்?
ஏற்கெனவே வந்துவிட்டது
அது உன் சட்டைப் பைக்குள்.
<><><>
////

awesome!இந்த வரிகள் முத்தாய்ப்பு கவிதைக்கு.

Rekha raghavan said...

உழைப்பின் வெற்றி முயற்சியிலிருக்கிறது என்பதை அழகாகச் சொல்லிச் செல்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான அறிவுரைகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Bagavath Kumar.A.Rtn. said...

நிறைய வேர்வை சிந்திவிட்டு
நிலவை ஏன் தேடுகிறாய்?
ஏற்கெனவே வந்துவிட்டது
அது உன் சட்டைப் பைக்குள்.
-அருமை

மனோ சாமிநாதன் said...

//நிறைய வேர்வை சிந்திவிட்டு
நிலவை ஏன் தேடுகிறாய்?
ஏற்கெனவே வந்துவிட்டது
அது உன் சட்டைப் பைக்குள்.//

அழகான வரிகள்!
சிற‌ப்பான கவிதை!

Sankar Gurusamy said...

அழகான அருமையான சிந்திக்கத்தூண்டும் வரிகள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

கோமதி அரசு said...

முதலிடத்துக்கான
முதலீடுகளில்
முதலிலிருப்பது
முயற்சியே.//

முயற்சி இல்லையேல் எதுவும் இல்லை.
அழகான கவிதை.

உழைப்பின் உயர்வை எடுத்துச் சொல்ல எறும்பு.

எறும்பு போல் சுறு சுறுப்பாய் உழைத்தால் வெற்றி நிச்சியம்.
தேர்வு நேரத்தில் அருமையான கவிதை.

ரிஷபன் said...

உலகம் உன் காலடியில்
அதில் சேர்ந்திருக்கும்
புழுதியின் கனத்துக்கேற்பவே..

Class!

ADHI VENKAT said...

அருமையான வரிகள் சார்.

ஹேமா said...

உண்மை உழைப்புக்கான ஊதியம் எப்போதும் பொய்யாகமல் எம்மிடமே.அருமையான கவிதை.மிகவும் ஆழ ரசித்தேன் !

ஹ ர ணி said...

excellent jana. first is best. elegant. congrats.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!